Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேட்மிண்டன் விளையாடும்போது சரிந்து விழுந்து உயிரிழந்த இளைஞர்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Youngster Died While Playing Badminton | சமீப காலமாக விளையாடிக் கொண்டு இருக்கும்போது மயங்கி விழுந்து உயிரிழப்பது, நடனமாடும்போது மயங்கி விழுந்து உயிரிழப்பது ஆகிய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், 25 வயது இளைஞர் ஒருவர் பேட்மிண்டன் விளையாடும்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பேட்மிண்டன் விளையாடும்போது சரிந்து விழுந்து உயிரிழந்த இளைஞர்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 28 Jul 2025 16:56 PM

ஐதராபாத், ஜூலை 28 : ஐதராபாத்தில் (Hyderabad) நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் விளையாடிக்கொண்டு இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், அந்த இளைஞர் விளையாடிக்கொண்டு இருக்கும்போதே திடீரென மயங்கி விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் திடீர் மாரடைப்பு மரணங்கள்

சமீப காலமாகவே மாரடைப்பு மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 15 வயது சிறுவன் முதல் 80 வயது முதியவர் வரை என எந்த வயதினரையும் பாகுபாடின்றி இந்த மாரடைப்பு மரணங்கள் ஆட்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நடனம் ஆடும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் எடுப்பது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது, விளையாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது உள்ளிட்ட பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் விளையாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : ஹரித்வார் கோயிலில் கூட்ட நெரிசல்.. பக்தர்கள் 6 பேர் உயிரிழப்பு… 50 பேர் காயம்!

விளையாடிக் கொண்டு இருக்கும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நபர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 25 வயதான ராகேஷ். சம்பத்தன்று அவர் தனது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிகொண்டு வந்துள்ளார். அவருக்கு எந்தவித உடல் பிரச்னையும் இல்லாத நிலையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ராகேஷ் திடீரென சரித்து விழுந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது நண்பர்கள் உடனடியாக ராகேஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனையில் ராகேஷ் மாரடைப்பால் உயிர் இழந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : பிரேக் பிடிக்காத கண்டெய்னர் லாரி.. அடுத்தடுத்து மோதி நொறுங்கிய 20 வாகனங்கள்.. ஒருவர் பலி!

இந்த நிலையில், விளையாடிக் கொண்டு இருக்கும்போதே ராகேஷ் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.