குக்கரால் தாக்கி, கழுத்தறுத்து பெண் கொலை – கொள்ளையடித்த வீட்டிலேயே குளித்து சென்ற திருடர்கள் – அதிர்ச்சி சம்பவம்

Hyderabad Murder: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அடுக்குமாடி வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொள்ளையர்கள் குக்கரால் தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கின்றனர். பாதுகாப்பு நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குக்கரால் தாக்கி, கழுத்தறுத்து பெண் கொலை - கொள்ளையடித்த வீட்டிலேயே குளித்து சென்ற திருடர்கள் - அதிர்ச்சி சம்பவம்

கொலை செய்யப்பட்ட பெண் ரேணு அகர்வால்

Updated On: 

11 Sep 2025 16:03 PM

 IST

ஹைதராபாத், செப்டம்பர் 11: ஹைதராபாத்தில் (Hyderabad) உள்ள ஒருஅடுக்குமாடி குடியிருப்பில் 13ஆம் மாடியில் வசித்துவந்த  50 வயதான ரேணு அகர்வால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேணு அகர்வால் அவரது கணவர் மற்றும் 26 வயது மகனுடன் ஸ்வான் லேக் அபார்ட்மென்ட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10, 2025 அன்று கணவர் மற்றும் மகன் இருவரும் வேலைக்காக வெளியே சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் அவரது கணவர், ரேணு அகர்வாலுக்கு பலமுறை போன் செய்தும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரேணு அகர்வால் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் இருந்திருக்கிறார். இதனையடுத்து காவல்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

கொடூரமான முறையில் கொலை

இந்த நிலையில் போலீசார் வந்து விசாரணை நடத்திய நிலையில், குற்றவாளிகள் முதில்ல ரேணு அகர்வாலின் கை மற்றும் கால்களை கட்டியுள்ளனர். பின்னர் குக்கரால் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் கத்தி மற்றும் கத்திரிக்கோல் கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து 40 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகள், அதன் பின் வீட்டிலேயே குளித்துள்ளனர். பின்னர் தங்களின் இரத்த கறை படிந்த ஆடைகளை அங்கேயே விட்டு, வேறு உடை அணிந்து தப்பி சென்றிருக்கின்றனர்.

இதையும் படிக்க : மார்க்கெட்டில் வைத்து மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்.. கொஞ்சம் கூட கவலை இல்லை என பகீர் வாக்குமூலம்!

பணியாளர் மீது ஏற்பட்ட சந்தேகம்

முதற்கட்ட விசாரணையில், இரு வீட்டு வேலைக்காரர்கள் மீது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களில் ஹர்ஷா என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள ஒரு ஏஜென்சி மூலம் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.  மற்றொருவர் ரோஷன், அருகிலுள்ள 14வது மாடியில் உள்ள வீட்டில்  வேலை பார்த்து வந்திருக்கிறார். இருவரும் சம்பவத்துக்கு முன்னர் ரேணு அகர்வால் வசித்த 13 ஆம் மாடிக்கு சென்று, சரியாக மாலை 5.02 மணிக்கு அங்கிருந்து வெளியேறியது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

ரேணு அகர்வாலின் வீட்டில் கொள்ளையடித்த இருவரும் ரோஷன் வேலை பார்த்து வந்த நபரின் பைக்கில் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குகட்பள்ளி காவல் நிலையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை பிடிக்க சிசிடிவி காட்சிகள், தடவியல் சான்றுகள் மற்றும் சாட்சியங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு வருகின்றன. ரேணுவின் உடல் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மனைவியுடன் சண்டை.. 3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை.. தானும் விபரீத முடிவு!

மிகுந்த பாதுகாப்பு மிகுந்த ஒரு அப்பார்ட்மென்ட்டில் இது போன்ற கொலை சம்பவம் நடைபெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் குற்றவாளிகளை விரைந்து பிடித்து, வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.