பிளாக் செய்ததால் ஆத்திரம்.. காதலனை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த காதலி!

Young Woman Killed Lover In Chhattisgarh | சத்தீஸ்கரில் 22 வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தனது காதலன் தனது மொபைல் எண்ணை பிளாக் செய்த நிலையில் அவர் இந்த கொடூர செயலை செய்துள்ளார்.

பிளாக் செய்ததால் ஆத்திரம்.. காதலனை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த காதலி!

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 Feb 2026 11:48 AM

 IST

சத்தீஸ்கர், பிப்ரவரி 04 : சத்தீஸ்கரில் (Chhattisgarh) 22 வயது இளம் பெண் ஒருவர் தனது காதலன் தனது செல்போன் எண்ணை பிளாக் செய்ததால் அவரது வீட்டிற்கு சென்று அவரை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தனது செல்போன் எண்ணை காதலன் பிளாக் செய்ததால் இளம் பெண் செய்த கொடூர செயல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காதலன் பிளாக் செய்ததால் இளம் பெண் ஆத்திரம்

சத்தீஸ்கரில் 22 வயது இளம் பெண் ஒருவர், ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். மிக நீண்ட காலமாக காதலித்து வந்த அவர்கள் இருவருக்கும் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்துள்ளது. இவ்வாறு தங்களது காதல் உறவில் சிக்கல் ஏற்பட்டு வந்த நிலையில், அந்த இளைஞர் இளம் பெண்ணின் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார். ஆனால், காதலனின் செயல் இளம் பெண்ணை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க : தேர்தலில் போட்டியிட 6 வயது மகளை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

காதலனை மார்பிள் குத்தி கொலை செய்த காதலி

காதலன் எண்ணை பிளாக் செய்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த அந்த இளம் பெண்ணுக்கு உச்சக்கட்ட கோபம் வந்துள்ளது. இந்த நிலையில், தனது காதலன் வீட்டிற்கு சென்ற அந்த இளம் பெண் அவரை மார்பில் கத்தியால் குத்தியுள்ளார். அப்போது அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காதலன் தன்னை பிளாக் செய்த நிலையில், அவர் வேறு ஒரு பெண்ணுடன் பழக்கத்தில் இருப்பதாக நினைத்து அந்த பெண் இந்த கொடூரத்தை செய்துள்ளர்.

இதையும் படிங்க : குடும்பத்துடன் இணைந்து கணவனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட மனைவி.. உ.பியில் பகீர் சம்பவம்!

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம் பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..