கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த கணவர்.. இளம் பெண் தற்கொலை!
Woman Killed Herself In Dowry Issue | பெங்களூரில் குருமூர்த்தி என்பவர் தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெங்களூரு, ஜனவரி 27 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு (Bengaluru) பகுதியில் வசித்து வருபவர் குருபிரசாத். இருவருக்கும் கீர்த்தி என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமணத்திற்கு கீர்த்தியின் பெற்றோர் சுமார் ரூ.35 லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறிய நிலையில், அது அப்படியே காற்றில் கலைந்துள்ளது. திடீரென பண கஷ்டம் ஏற்பட்ட நிலையில், பிரசாத் தனது மனைவியை அவரது பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு துன்புறுத்தி வந்த நிலையில், அவர் தனது உயிரையே மாய்த்துக்கொண்டுள்ளார்.
பண தேவையால் கூடுதல் வரதட்சணை கேட்ட கணவன்
குருபிரசாத் வீடு கட்ட முடிவு செய்த நிலையில், அவருக்கு அதிக பண தேவை ஏற்பட்ட நிலையில், அவர் கீர்த்தியிடம் அவரது பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி தருமாறு கூறியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த கீர்த்தி தனது பெற்றோர் திருமணத்திற்கே அதிக செலவு செய்துவிட்டதாக கூறியுள்ளார். அப்போது தனக்கு கொடுத்த வரதட்சணை மிகவும் குறைவாக உள்ளதாகவும், கூடுதல் வரதட்சணை வேண்டும் என கூறி குருபிரசாத், கீர்த்தியை இரண்டு மாதங்களாக துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து கீர்த்தி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதையும் படிங்க : மனைவியின் நிச்சயதார்த்த சேலையை காதலிக்கு பரிசளித்த கணவன்.. காலை முறித்த பெண் வீட்டார்!
8 லட்சம் கொடுத்த பெற்றோர் – மீண்டும் பணம் கேட்ட கணவன்
கீர்த்தி கூறியதை தொடர்ந்து அவரது பெற்றோர் நண்பர்கள் மற்றும் வங்கியிடம் இருந்து கடனாக ரூ.8 லட்சம் பணத்தை பெற்று குருபிரசாத்திடம் கொடுத்துள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட அவர் கூடுதலாக பணம் வேண்டும் என கேட்டு கீர்த்தியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இவ்வாறு கணவன் – மனைவி இடையே சிக்கல் நீடித்து வந்த நிலையில், ஜனவரி 24, 2026 அன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிறையில் காதலில் விழுந்த கொலை குற்றவாளிகள்.. அவசர பரோலில் திருமணம்.. நடுங்க வைக்கும் பின்னணி!
இதனால் மணமுடைந்த கீர்த்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த குருமூர்த்தி மணைவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து கீர்த்தியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குருபிரசாத்தை கைது செய்துள்ள போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.