என்னுடன் பேச மாட்டியா?.. பெண்ணை உயிருடன் எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!

Woman Burned Alive By Man and His Friends | உத்தர பிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத் என்ற பகுதியில் பெண் ஒருவர் தன்னிடம் பேசாததால் ஆத்திரமடைந்த நபர் அந்த பெண்ணை தனது நண்பர்களுடன் இணைந்து உயிருடன் கொளுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னுடன் பேச மாட்டியா?.. பெண்ணை உயிருடன் எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!

கொலைசெய்யப்பட்ட பெண்

Published: 

09 Sep 2025 08:31 AM

 IST

உத்தர பிரதேசம், செப்டம்பர் 09 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) பெண் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் தன்னுடன் பேச மறுத்ததால் தீபக் என்ற நபர் தனது நண்பர்களுடன் இணைந்து இந்த கொடூர செயலை செய்துள்ளார். உயிருடன் எரிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தன்னுடன் பேசாததால் பெண்ணை உயிருடன் எரித்த நபர்

நிஷா சிங் என்ற 33 வயது பெண் திருமணமாகி கணவன் வீட்டில் இருந்த நிலையில், ஆகஸ்ட் 06, 2025 அன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபரூக்காபாத் என்ற பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் மருத்துவரை பார்க்க சென்றுக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த தீபக் என்ற நபர், நிஷாவை வழிமறித்துள்ளார். அவர் கடந்த இரண்டு மாதங்களாகவே நிஷாவை தன்னுடன் பேசும்படி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அன்றைய தினமும் அவர் அத்தகைய செயலில் ஈடுபட்ட நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கள்ளக்காதலனுடன் உள்ளாசமாக இருப்பதை கண்ட 6 வயது சிறுமி.. கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட கொடூரம்!

இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரமடைந்த தீபக் தனது நண்பர்கள் உடன் இணைந்து நிஷாவை உயிருடன் தீ வைத்து கொளுத்தியுள்ளார். இதனால் வலியால் துடித்துப்போன அந்த பெண் தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு குடும்ப மருத்துவரிடம் சென்றுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அந்த பெண்ணின் தந்தை எனது மகள் ஆகஸ்ட் 06, 2025 அன்று தீபக் மற்றும் அவரது நண்பர்களால் உயிருடன் எரிக்கப்ப்பட்டுள்ளார். அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்று கூறியுள்ளார்.

அப்பா என்னை காப்பாற்றுங்கள் என அழுத பெண்

தனது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்து மருத்துவமனையில் இருந்து வந்த அழைப்பை குறித்தும் அந்த பெண்ணின் தந்தை கூறியுள்ளார். எனக்கு மருத்துவரிடம் இருந்து அழைப்பு வந்தது. உங்கள் மகள் மிக மோசமாக எரிந்துள்ளார் என்று அவர் கூறினார். நான் அங்கு சென்று பார்த்தபோது எனது மகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அப்பா என்னை காப்பாற்றுங்கள், அப்பா என்னை காப்பாற்றுங்கள் என்று அவர் கத்திக்கொண்டு இருந்தார். நான் இது எப்படி நடந்தது என அவளிடம் கேட்டபோது தீபக் தன்னை கொளுத்தியதாக அவர் கூறினார் என்று கூறியுள்ளார்.