சத்தீஸ்கரில் பெரும் ரயில் விபத்து – இதுவரை 6 பேர் பலி… மேலும் உயரும் பலி எண்ணிக்கை?

Chattisgarh Train Accident : சத்தீஸ்கரில் நடந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. சதீஸ்கர் மாநிலம் லால்கதான் பகுதியில் நவம்பர் 4, 2025 அன்று மாலை 4 மணியளவில்,  ஒரு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சத்தீஸ்கரில் பெரும் ரயில் விபத்து - இதுவரை 6 பேர் பலி... மேலும் உயரும் பலி எண்ணிக்கை?

சத்தீஸ்கரில் ரயில் விபத்து

Updated On: 

04 Nov 2025 18:32 PM

 IST

சத்தீஸ்கர் (Chhattisgarh) மாநிலம் பிலாஸ்பூர் அருகே நடந்த துயரகரமான ரயில் விபத்தில் (Train Accident) பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. சதீஸ்கர் மாநிலம் லால்கதான் பகுதியில் நவம்பர் 4, 2025 அன்று மாலை 4 மணியளவில்,  ஒரு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் பெரும் ரயில் விபத்து

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகே பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இதுவரை 6 பேர் உயிரழந்துள்ளனர். தற்போது மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். தற்போது மீட்பு படையினர் தற்போது மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீட்பு பணிகள் தாமதமாவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : கொதிக்கும் தண்ணீரில் விழுந்து பலியான பச்சிளம் குழந்தை.. பதைபதைக்கும் சம்பவம்!

விபத்து நடந்த ரயிலின் காட்சிகள்

 

விபத்துக்கான காரணம் குறித்து தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. ஆனால் சிக்னல் பிழை அல்லது பிரேக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. மேலும்,  மாநில அரசும் ரயில்வே துறையும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றன. இந்த துயர சம்பவம் குறித்து ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க  : சென்னையில் நள்ளிரவில் மர்ம கும்பல் வெறிச்செயல்.. சாலையில் சென்ற 10 பேருக்கு அரிவாள் வெட்டு!

இந்த சம்பவம் மாலை 4 மணியளவில் நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து ஏற்பட்டதும் ரயில்வே துறை அனைத்து அவசர உதவி குழுக்களையும் சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதாக ரயில்வே தகவல் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.