சிட்னி தாக்குதல்…யூத நிறுவனங்களுக்கு இந்தியா உயர்மட்ட எச்சரிக்கை!

Sydney Attack India Issues High Level Warning: ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட கொடூர துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, யூத நிறுவனங்களுக்கு இந்தியா உயர்மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், யூத நிறுவனங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சிட்னி தாக்குதல்...யூத நிறுவனங்களுக்கு இந்தியா உயர்மட்ட எச்சரிக்கை!

யூத நிறுவனங்களுக்கு உயர்மட்ட எச்சரிக்கை

Published: 

15 Dec 2025 10:40 AM

 IST

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 12 கொல்லப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் உள்பட 29 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஹனுக்கா பண்டிகை காலத்தில் யூத நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களுக்கு இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் உயர்மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளன. சிட்னியின் பூண்டி கடற்கரையில் யூத பண்டிகையின் தொடக்கத்தை குறிக்கும் கடற்கரை நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் கூடியிருந்தனர். அவர்கள் மீது அடையாளம் தெரியாத 2 நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். சுமார் 50 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

யூத நிறுவனங்களுக்கு உயர்மட்ட எச்சரிக்கை

இந்தச் சம்பவத்துக்கு பிறகு யூத நிறுவனங்கள் முழுவதும் பாதுகாப்பு நிறுவனங்கள் மனித வளத்தை அதிகரித்துள்ளன. மேலும், உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதே போல, இந்தியா முழுவதும் உள்ள உள்ளூர் காவல் நிலையங்களில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும், அதற்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் குறித்து அனைத்து பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுகள் மற்றும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு சந்தேகப்படும் பயங்கரவாத நபர்களை தேடுவதாகவும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் படிக்க: கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கும் தொடர்பா?.. எய்ம்ஸ் அறிக்கையில் வெளியான முக்கிய தகவல்கள்!

யூத நிறுவனங்கள் மீது குறி வைக்கும் பயங்கரவாதிகள்

இந்தியாவில் கடந்த காலங்களில் யூத நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்காக குறி வைத்தனர். அதன்படி, கடந்த 2008- ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது லஷ்கர் -இ -தொய்பா பங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தது முதல் தற்போது வரை இஸ்ரேலிய மற்றும் யூத நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வருகின்றன.

புது டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்

கடந்த 2012- ஆம் ஆண்டு புது டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் இஸ்ரேலியா ராணுவ அதிகாரியின் மனைவி காயம் அடைந்தார். இதே போல, கடந்த 2021- ஆம் ஆண்டில் இஸ்ரேலியா தூதரகத்திற்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பில் வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்திய நிறுவனங்கள் ஈரானின் ஐ. ஆர். ஜி. சி. குட்ஸ் படை இதற்கு காரணம் என தெரியவந்தது. கடந்த 2023- ஆம் ஆண்டில் புனேவில் வெடி பொருள்கள், ட்ரோன் உபகரணங்கள் மற்றும் மும்பையின் சபாத் வீட்டின் படங்களை தங்கள் தொலைபேசிகள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க: தலைமை ஆசிரியரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 9 ஆம் வகுப்பு மாணவன்.. பகீர் சம்பவம்!

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்