காணாமல் போன போர் விமானம்.. 2 வீரர்களின் நிலை என்ன?.. தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புத்துறை!

Su-30MKI Fighter Jet Crashed And Missed | அசாமில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த Su-30MKI ரக போர் விமானம் திடீரென ரேடாரில் இருந்து காணாமல் போயுள்ளது. இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை கூறியுள்ள நிலையில், அதனை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காணாமல் போன போர் விமானம்.. 2 வீரர்களின் நிலை என்ன?.. தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புத்துறை!

மாதிரி புகைப்படம்

Published: 

06 Mar 2026 08:26 AM

 IST

கவுகாத்தி, மார்ச் 06 : அசாமில் (Assam) போர் விமானம் (War Fighter Jet) ஒன்று ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போர் விமானத்தில் இரண்டு போர் வீரர்கள் இருந்ததாக கூறப்படும் நிலையில், காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போர் விமானம் திடீரென காணாமல் போன சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அசாமில் திடீரென மாயமான போர் விமானம்

அசாம் மாநிலம், கர்பி அங்லாங் மாவட்டம், ஹோர்ஹட் விமான தளத்தில் இருந்து சுகோய் – 30 ரக போர் விமானம் ஒன்று நேற்று (மார்ச் 05, 2026) புறப்பட்டு சென்றுள்ளது. அந்த விமானம் சரியாக இரவு 7.42 மணி அளவில் ரேடாரில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளது. காணாமல் போன போர் விமானத்தை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : அக்ஷர்தாம் ஆசிரமத்தில் கோலாகலமான ஹோலி கொண்டாட்டம்.. அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பங்கேற்பு

கர்பி அங்லாங் பகுதியில் விபத்துக்குள்ளான போர் விமானம்

போர் விமானம் காணாமல் போனதாக கூறப்பட்டு வந்த நிலையில், பயிற்சிப் பணியில் ஈடுபாட்டு இருந்த Su-30MKI ரக விமானம், ஜோர்ஹட்டில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசாமின் கர்பி அங்லாங் பகுதியில் விபத்துக்குள்ளானது. தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளது.

இதையும் படிங்க : மேற்கு ஆசியா போர் பதட்டம்.. உஷார் நிலையில் இந்திய கடற்படை.. களமிறங்கிய ஐஎன்எஸ் சூரத்!

காணாமல் போன அந்த விமானத்தில் இரண்டு வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மாயமான போர் விமானம் குறித்து தெரியாத பட்சத்தில் எதையும் உறுதி செய்ய முடியாது எனவும், தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி