பிரேக் பிடிக்காத கண்டெய்னர் லாரி.. அடுத்தடுத்து மோதி நொறுங்கிய 20 வாகனங்கள்.. ஒருவர் பலி!

Pune Container Truck Crash | புனேவில் சாலையில் வரிசையாக நின்றுக்கொண்டு இருந்த வாகனங்கள் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 1 பெண் பலியான நிலையில், 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட வாகங்கள் சேதமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேக் பிடிக்காத கண்டெய்னர் லாரி.. அடுத்தடுத்து மோதி நொறுங்கிய 20 வாகனங்கள்.. ஒருவர் பலி!

புனே கண்டெய்னர் லாரி விபத்து

Updated On: 

27 Jul 2025 11:00 AM

புனே, ஜூலை 27 : புனேவில் (Pune) மிக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி சாலையில் வரிசையாக நின்றுக்கொண்டு இருந்த வாகனங்களின் மீது மோதி கடும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பயங்கர சாலை விபத்தில் ஒரு பெண் பலியான நிலையில், சுமார் 18-க்கும் மேற்பட்ரோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சாலையில் நின்றுக்கொண்டு இருந்த வாகனங்கள் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாலையில் நின்ற வாகனங்கள் மீது மோதிய கண்டெய்னர் லாரி

மும்பையின் அடோஷி டனல் பகுதியில் தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சாலையில் வாகனங்கள் நின்றுக்கொண்டு இருந்த நிலையில், அப்போது மிக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று மோதி கடும் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சாலையில் நின்றுக்கொண்டிருந்த வாகனங்கள் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளன. இந்த நிலையில், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பொதுமக்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : Google Map பார்த்து சென்றதால் குளத்தில் கவிழ்ந்த கார்.. உயிர் தப்பிய தம்பதி!

கண்டெய்னர் லாரி விபத்து – போலீசார் சொன்ன முக்கிய தகவல்கள்

இந்த விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கண்டெய்னர் லாரியின் பிரேக் பிடிக்காமல் போனது தான் இதற்கு முதன்மை காரணம் என போலீசார் கூறியுள்ளனர். லாரியில் பிரேக் பிடிக்காத நிலையில், கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் லாரியை சாலையில் நின்ற வாகனங்கள் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் சாலையில் நின்றுக்கொண்டு இருந்த சுமார் 20-கும் மேற்பட்ட வாகங்கள் கடுமையாக சேதமாகியுள்ளன. இந்த வாகனங்களில் மிகவும் விலை உயர்ந்த வாகனங்கள் ஆன BMW மற்றும் Mercedes Benz உள்ளிட்ட கார்கள் அடங்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : மனைவியுடன் மீண்டும் இணைய மாந்திரீகம் செய்த நபர்.. 6 வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூரம்!

வாகனங்களை முற்றிலுமாக சிதைத்த கண்டெய்னர் லாரி

படுகாயமடைந்தவர்களின் ஒரு பெண் பலி

இந்த விபத்தில் மொத்தம் 19 பேர் படுகாயமடைந்த நிலையில், ஒரு பெண் மட்டும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இந்த கோர விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.