Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆளுநர் அதிகாரங்கள் விவகாரம்.. உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு அடுக்கடுக்கான கேள்விகள்!

President Droupadi Murmu : தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்டபாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி இருக்கிறார். சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் முர்மு விளக்கத்தை கேட்டு இருக்கிறார். மசோதாக்கள் மீது முடிவு எடுக்க காலநிர்ணம் செய்த விவகாரத்தில் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார்.

ஆளுநர் அதிகாரங்கள் விவகாரம்.. உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு அடுக்கடுக்கான கேள்விகள்!
திரௌபதி முர்முImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 May 2025 12:02 PM

டெல்லி, மே 15 :  தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்டபாக உச்ச நீதிமன்றத்திடம்  (Supreme court) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு (President Droupadi Murmu) 14 கேள்விகளை எழுப்பி இருக்கிறார். சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் முர்மு விளக்கத்தை கேட்டு இருக்கிறார். மசோதாக்கள் மீது முடிவு எடுக்க காலநிர்ணம் செய்த விவகாரத்தில் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் 2025 ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ஆளுநரை உச்ச நீதிமன்றம் கடுமையாக கடிந்ததோடு, அரசியலமைப்புச் சட்டம் 142 பிரிவை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் அந்த மசோதக்களுக்கு ஒப்புதல் அளித்தது.

உச்ச நீதிமன்றத்திடம் திரௌபதி முர்மு கேள்வி

மேலும், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கான கால வரம்பையும் நிர்ணயித்தது. அதே நேரத்தில், மசோதாக்களுக்கு ஒப்புதல் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது. அதாவது, மாநில மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்தது.

இந்த உத்தரவும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு, இந்த விவகாரத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்  உச்ச நீதிமன்றத்தை தொடர்ந்து விமர்சித்தார். குடியரசுத் தலைவருக்கு எப்படி உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

ஆனால், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு மௌனமாக இருந்து வந்தார். இந்த நலையில், மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு விதித்த காலக்கெடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அடுக்கடுக்கான 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

14 கேள்விகள் என்னென்ன?

  • இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒரு மசோதா ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு இருக்கும் அரசியலமைப்பு ஆப்ஷன்கள் என்ன?
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 200-ன் கீழ் ஆளுநரிடம் ஒரு மசோதாவை ஒப்புதலுக்கான சமர்ப்பிக்கும்போது, ​​அமைச்சர்கள் குழு வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா?
  • இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஆளுநர் அரசியலமைப்பு அதிகாரங்களை பயன்படுத்துவது நியாயமா?
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது அல்லது நிறுத்தி வைப்பது குறித்து ஆளுநருக்கு அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-க்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 361க்கும் தடையாக இருக்கிறதா?
  • அரசியலமைப்பின்படி, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு எந்த கால அவகாசமும் விதிக்கப்படாத பட்சத்தில், தங்களது அதிகாரங்கள் எப்படி பயன்படுத்துவது என்ற அளவுகோல் இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரால் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 201 இன் கீழ் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு அதிகாரங்களை பயன்படுத்த கூடாதா?
  • அரசியலமைப்பின் கீழ் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலக்கெடு மற்றும் தனது அதிகாரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என வரையறை இல்லாத நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 201 வது பிரிவின் கீழ் ஜனாதிபதி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?
  • குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நிர்வகிக்கும் அரசியலமைப்பு நடைமுறையில், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143-ன் கீழ், ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கும்போது, ​​உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று, உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
  • இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200 மற்றும் 201 இன் கீழ் ஆளுநர் மற்றும் ஜனாதிபதியின் முடிவுகள், சட்டம் அமலுக்கு வருவதற்கு முந்தைய கட்டத்தில் கருத்தில் கொள்ள வேண்டுமா? ஒரு மசோதா சட்டமாவதற்கு முன்பு, அதன் உள்ளடக்கங்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தால் முடிவு எடுக்க முடியுமா?
  • குடியரசுத் தலைவர்/ஆளுநரின் அரசியலமைப்பு அதிகாரங்களை உத்தரவுகளையும் இந்திய அரசியலமைப்பின் 142ஆவது பிரிவை பயன்படுத்த உச்ச நீதிமன்றத்தால் மாற்ற முடியுமா?
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 இன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் நடைமுறைச் சட்டம் அல்லது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதா? அரசியலமைப்பு அல்லது நடைமுறையில் உள்ள சட்டத்தின் தற்போதைய அடிப்படை அல்லது நடைமுறை விதிகளுக்கு முரணான அல்லது முரண்பாடான உத்தரவுகளை பிறப்பித்தல்/ஆணைகளை பிறப்பித்தல் வரை நீட்டிக்கப்படுகிறதா?
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 131-ன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புத் தடைசெய்கிறதா?

சிலருக்கு கிரெடிட் கார்டுகள் சிக்கலை ஏற்படுத்தலாம் - ஏன்?
சிலருக்கு கிரெடிட் கார்டுகள் சிக்கலை ஏற்படுத்தலாம் - ஏன்?...
இந்திய ரயில்வேயின் புதிய ரூல் - ஏசி கோச்சில் போறவங்களுக்கு ஆறுதல்
இந்திய ரயில்வேயின் புதிய ரூல் - ஏசி கோச்சில் போறவங்களுக்கு ஆறுதல்...
இந்தியாவில் ஆப்பிள் போன்களை தயாரிப்பதை விரும்பவில்லை - டிரம்ப்
இந்தியாவில் ஆப்பிள் போன்களை தயாரிப்பதை விரும்பவில்லை - டிரம்ப்...
சந்திரனால் உருவாகும் ராஜயோகம்.. இந்த 6 ராசிக்கு இனிமேல் பண மழை!
சந்திரனால் உருவாகும் ராஜயோகம்.. இந்த 6 ராசிக்கு இனிமேல் பண மழை!...
பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? - ரிசர்வ் வங்கியின் புது ரூல்ஸ்
பெர்சனல் லோன் வாங்கப்போறீங்களா? - ரிசர்வ் வங்கியின் புது ரூல்ஸ்...
கோடையில் முடி உதிர்தல் பிரச்சனையா? இதை செய்தால் தடுக்கலாம்!
கோடையில் முடி உதிர்தல் பிரச்சனையா? இதை செய்தால் தடுக்கலாம்!...
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? - இந்த 3 பேரின் நட்பை கைவிடுங்கள்!
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? - இந்த 3 பேரின் நட்பை கைவிடுங்கள்!...
மது, சிகரெட் பழக்கத்தை விட்டு 5 வருஷம் ஆச்சு... விஷால் ஓபன் டாக்
மது, சிகரெட் பழக்கத்தை விட்டு 5 வருஷம் ஆச்சு... விஷால் ஓபன் டாக்...
செல்வ வளம் பெருக வேண்டுமா? - லட்சுமி குபேரரை வழிபடுங்க!
செல்வ வளம் பெருக வேண்டுமா? - லட்சுமி குபேரரை வழிபடுங்க!...
வங்கதேச வீரர் IPLல் எதற்கு? DC அணிக்கு எதிராக ரசிகர்கள் கேள்வி!
வங்கதேச வீரர் IPLல் எதற்கு? DC அணிக்கு எதிராக ரசிகர்கள் கேள்வி!...
மூத்த குடிமக்களுக்கான எஃப்டி வட்டியை உயர்த்திய வங்கிகள்!
மூத்த குடிமக்களுக்கான எஃப்டி வட்டியை உயர்த்திய வங்கிகள்!...