பறந்து வந்த ஆளில்லா விமானம்.. ராஜஸ்தானை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. தடுத்து நிறுத்திய இந்திய ராணுவம்..!

Pakistan’s Drone Try to Attack: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மட்டும் 20 ஏவுகணைகள் அழித்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது முப்படை தலைமை தளபது, படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்த முயற்சி நடந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பாகிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலை இந்தியா தடுத்து நிறுத்தியது. அப்போது பலத்த வெடிச்சத்தம் கேட்டது.

பறந்து வந்த ஆளில்லா விமானம்.. ராஜஸ்தானை தாக்க முயற்சித்த பாகிஸ்தான்.. தடுத்து நிறுத்திய இந்திய ராணுவம்..!

தாக்குதல் தடுக்கப்பட்ட காட்சி

Updated On: 

08 May 2025 22:08 PM

ராஜஸ்தான், மே 8: ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருகிறது. முன்னதாக ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்த முயற்சி நடந்த நிலையில், ராஜஸ்தானின் (Rajasthan) ஜெய்சால்மரில் பாகிஸ்தானின் ஆளில்லா விமான தாக்குதலை இந்தியா தடுத்து நிறுத்தியது. அப்போது பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலுள்ள இந்திய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மேலும், பாகிஸ்தான் எல்லையில் முன்கள ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஜம்மு (Jammu) பகுதியில் குண்டு வெடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரோன் தாக்க முயற்சித்த காட்சி:

தாக்குதல் நடக்க முயற்சி:

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் ராஜஸ்தான் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று அதாவது 2025 மே 8ம் தேதி இரவு 8.45 மணிக்கு ஜம்முவை ஏவுகணை மூலம் தாக்க பாகிஸ்தான் மீண்டும் முயற்சி செய்தது. இதன்பின்னர், ஜம்முவிலிருந்து பஞ்சாப், ராஜஸ்தான் வரை மின் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்சால்மரில் பாகிஸ்தானில் ட்ரோனை இந்திய வான் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியாக ஏ.என்.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ராஜஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், வானத்தில் பலத்த மோதல்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மட்டும் 20 ஏவுகணைகள் அழித்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது முப்படை தலைமை தளபது, படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.