இந்தியாவில் லியோனல் மெஸ்ஸி ஏன் விளையாட முடியாது…காரணம் இதோ!
Football Legend Lionel Messi Cant Play In India: கால்பந்து ஜாம்பவனானா லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் விளையாட முடியாததற்கு மிக முக்கியமான காரணம் உள்ளது. இதை மீறி லியோனல் மெஸ்ஸியால் இந்தியாவில் கால்பந்து விளையாட முடியாது. எதற்காக என்பதை பார்க்கலாம்.
கால்பந்து ஜாம்பவனான லியோனல் மெஸ்ஸி உலகின் மிக உயர்ந்த விளையாட்டு காப்பீட்டு கொள்கைகளில் ஒன்றை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இவரது இடது காலை 900 மில்லியன் டாலர்களுக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரம் கோடிக்கு காப்பீடு செய்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற விளையாட்டுகள் மற்றும் கண்காட்சி போட்டிகளின்போது, ஏற்படும் எந்த ஒரு ஆபத்தான காயமும் அவருக்கு மில்லியன் கணக்கான இழப்பை ஏற்படுத்த கூடும். இதன் காரணமாக அவரது கிளப் இன்டர்மியாமி அல்லது அர்ஜென்டினா தேசிய அணியால் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படாத எந்த போட்டியிலும் பங்கேற்க கால்பந்து ஜாம்பவான் அனுமதிக்கப்படுவதில்லை. மற்ற விளையாட்டு வீரர்களுக்கு மாற்றி அமைக்கக்கூடிய ஒப்பந்தங்கள் இருக்கும் நிலையில், மெஸ்ஸியின் காப்பீடு மிகவும் தெளிவாக உள்ளது. இதில், கண்காட்சி போட்டிகள் அல்லது சாதாரண விளையாட்டுகள் இவற்றில் அடங்கும்.
இந்தியாவில் மெஸ்ஸி விளையாட முடியாததற்கு காரணம்
இந்தியாவில் விளையாடும் போது மெஸ்ஸி காயமடைந்தால், காப்பீட்டிலிருந்து நிதி இழப்பீடு பொருந்தாது. அதனால் தான், நட்பு ரீதியான போட்டி அல்லது காட்சி போட்டிக்கான ரசிகர்களின் நம்பிக்கை இருந்த போதிலும் இந்தியாவில் மெஸ்ஸியின் செயல்பாடுகள் விளம்பர நிகழ்வுகளுக்கு மட்டுமே பொருந்துகிறது. கூடைப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டான் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் “விளையாட்டின் காதல்” என்ற பிரிவு இடம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: சிட்னி தாக்குதல்…யூத நிறுவனங்களுக்கு இந்தியா உயர்மட்ட எச்சரிக்கை!




மெஸ்ஸிக்கு இழப்பீடு வழங்கப்படமாட்டாது
இந்த பிரிவானது அவரை எங்கும், எந்த நேரத்திலும், அணியின் ஒப்புதல் இல்லாமல் கூடைப்பந்து விளையாட அனுமதிப்பதாகும். இதில், அவர் காயம் அடைந்தாலும் கூட அவருக்கு இழப்பீடு வழங்கப்படும். ஆனால், மெஸ்ஸிக்கு அத்தகைய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. அவரது காப்பீடு சாதாரண விளையாட்டை விட நிதி பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. எனவே, லியோனல் மெஸ்ஸி இந்திய மண்ணில் டிராபில் செய்வதையோ அல்லது கோல் அடிப்பதையோ ரசிகர்கள் பார்க்க முடிவதில்லை.
கால்பந்து சூப்பர் ஸ்டார் பாதுகாப்பு உறுதி
இருந்தாலும், இந்த கவனமான அணுகுமுறை உலகளாவிய கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு காயம் அவரது வாழ்க்கையை மட்டுமல்ல அவரது திறமையுடன் இணைக்கப்பட்ட மிகப்பெரிய நிதி ஆதரவையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. மெஸ்ஸியின் இந்த வருகை நேரடி போட்டிகளைக் கொண்டிருக்காமல் இருக்கலாம்.
கடுமையான விதிகளுடன் வரும் லியோனல் மெஸ்ஸி
ஆனால், அந்த ஜாம்பவானை நேரில் பார்க்கும் வாய்ப்பு இன்னும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அனுபவம் ஆகும். எனவே, லியோனல் மெஸ்ஸியை பார்க்கும் இந்த வாய்ப்பு எதற்காக கடுமையான விதிகளுடன் வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
மேலும் படிக்க: சென்னை டூ ஆந்திரா வந்தே பாரத் ரயில் சேவை…நிறுத்தம்…கட்டணம் எவ்வளவு!