பத்ம விருதுகள் 2026 – 45 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் – யாருக்கெல்லாம் கிடைக்கப்போகுது?
Padma Awards 2026 : குடியரசு தினமான 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகளை விரைவில் அறிவிக்கவுள்ளது. இந்த நிலையில் இந்த 2026 ஆம் ஆண்டு 45 பேர் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
77வது குடியரசு தினத்தை (Republic Day) முன்னிட்டு, மத்திய அரசு இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகளை விரைவில் அறிவிக்கவுள்ளது. இந்த நிலையில் விருது பெறுபவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் விஞ்ஞானிகள் முதல், மண்ணோடு ஒன்றிணைந்து நாட்டின் உணவு தன்னிறைவுக்காக உழைக்கும் விவசாயிகள் வரை, நாட்டின் முன்னேற்றப் பாதையை மாற்றி அமைக்கும் 45 பேர் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பத்மஸ்ரீ விருது பெறப்போகும் 45 பேர் யார்?
குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள இந்த பட்டியலில், அறிவியல், விவசாயம், கலை, கலாச்சாரம், சமூக சேவை உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து நடேசன், திருவாரூர் பக்தவத்சலம், ஆர். கிருஷ்ணன், திருத்தணி சுவாமிநாதன் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இதையும் படிக்க : குடியரசு தினம் கொண்டாடுவதற்கான காரணம் என்ன? இந்திய அரசியலமைப்பு குறித்த 7 முக்கிய தகவல்கள்




கலை மற்றும் கலாச்சாரத் துறைகளில் சிறப்பான சேவையாற்றிய புத்ரி டாட்டி, மேவாத்தி ஜோகி, ஹலிவார், கேம் ராஜ், ஸ்ரீரங்க தேவபா, யும்னாம் ஜாத்ரா சிங் உள்ளிட்டவர்களும் பத்ம ஸ்ரீ விருது பெறவுள்ளதாக கூறப்படுகிறது. சிசிஎம்பி நிறுவனத்தின் விஞ்ஞானியான டாக்டர் குமாரசாமி தங்கராஜ், மரபணு மற்றும் மனித வரலாற்று ஆய்வுகளில் செய்த பங்களிப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மாடுவளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித் துறையில் செய்த சேவைகளுக்காக மமிடி ராம் ரெட்டி, பத்ம ஸ்ரீ விருதைப் பெறவுள்ளார்.
விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகளில் பங்களிப்பு வழங்கிய அங்கேகௌடா, தேவகி அம்மாஜி, எஸ்.ஜி. சுஷீலம்மா, டாகா ராம் பில் ஆகியோரும் இந்த ஆண்டின் பத்ம ஸ்ரீ விருதுகளை பெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், சமூக சேவை மற்றும் பிற பிரிவுகளில் சிறந்த பணிகளை செய்த ஃபெர்னாண்டஸ், பகவந்தாஸ், திந்தா, பிரிஜ்லால், சிரஞ்சீ லால் யாதவ், ஹாஜிபாய், மோகன் உள்ளிட்டோரின் சேவைகளையும் மத்திய அரசு அங்கீகரித்து விருதுகள் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : குடியரசு தின சிறப்பு பேரணிக்கு இதையெல்லாம் எடுத்துச் செல்லக் கூடாது.. லிஸ்ட் இதோ!
மேலும், இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ பட்டியலில் சரண், தர்மிக்லால், இந்தர்ஜித், பழனிவேல், கைலாஷ் சந்திரா, மகேந்திர குமார், நரேஷ் சந்திர தேவ், நிலேஷ் வினோத் சந்திரா, நூருதீன் அகமது, பத்ம குர்மெட், லெக்தேபி, ரகுபத் சிங், ரகுவீர் துக்காராம், ராஜஸ்தபதி, ராமச்சந்திரா, பொங்கனர், ஷாஃபி ஷௌக், ஷ்யாம் சுந்தர், சிமாஞ்சல் பாட்ட்ரோ, சுரேஷ், டெச்சி குபின், விஷ்வ பந்து உள்ளிட்ட பலர் இடம்பிடித்துள்ளனர். மரபணு விஞ்ஞானிகள், சாதாரண விவசாயிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள் என பல்வேறு பின்னணியிலுள்ள நபர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது, இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பட்டியலுக்கு நாடு முழுவதும் பாராட்டுகளை பெற்றுத்தந்துள்ளது.