Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆபரேஷன் சிந்தூர்.. பாகிஸ்தான் மீது தாக்குதல்.. பதிலடியை துவங்கிய இந்தியா!

India Pakistan Conflict : பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தி அதிகரித்து இருக்கிறது. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, அதற்கு பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்.. பாகிஸ்தான் மீது தாக்குதல்.. பதிலடியை துவங்கிய இந்தியா!
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 May 2025 07:00 AM IST

டெல்லி, மே 7 : பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்தியா ராணுவம் தாக்குதல் (Operation sindoor) நடத்திய பதற்றத்தை ஏற்படுத்தி அதிகரித்து இருக்கிறது. மே 7ஆம் தேதியான இன்று போர் பாதுகாப்பு ஒத்திகை நடக்கும் நிலையில், நள்ளிரவில் பாகிஸ்தான்  (india Pakistan Conflict) மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மற்றும் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத குழுக்களின் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.

பாகிஸ்தான் மீது தாக்குதல்

பெண்கள் நெற்றில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, ராணுவ நடவடிக்கைக்கு சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த தாக்குதலில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்டதாகவும், பல பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் உள்ள முசாபராபாத், கோட்லி, குல்பூர், பிம்பர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட், சக் அமரு, முரிட்கே, பஹவல்பூர் ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் குறித்து பதிவிட்ட இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூர்.. நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது.  ஜெய் ஹிந்த் என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதல் நடத்தவில்லை. ராணுவத்தினர் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே, இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என தெரிவித்துள்ளது.

பதிலடியை துவங்கிய இந்தியா

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறுகியல், “தந்திரமான எதிரி பாகிஸ்தானில் ஐந்து இடங்களைத் தாக்கியுள்ளார். இந்தியாவால் நடத்தப்பட்ட இந்த போர் நடவடிக்கைக்கு வலுவான பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது. வலுவான பதிலடி கொடுக்கப்படும். பாகிஸ்தான் தேசமும், பாகிஸ்தான் ஆயுதப் படைகளும் எதிரிகளை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும். எதிரி தனது இலக்குகளில் வெற்றிபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த தாக்குதலை அடுத்து, காஷ்மீரில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் நண்பகல் வரை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. அமிர்தசரஸுக்குச் செல்லும் இரண்டு சர்வதேச விமானங்கள் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டதாக அது தெரிவித்துள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும்,  பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப்படலாம் என எதிர்பாக்கப்பப்படுகிறது.