Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை.. ஆப்கன் அமைச்சர் போட்ட உத்தரவு.. டெல்லியில் பரபரப்பு!

Afghanistan Minister Press Meet In Delhi : அரசு முறைப் பயணமாக டெல்லி வந்த ஆப்கானிஸ்தான் அமைச்சர் முட்டாகி 2025 அக்டோபர் 10ஆம் தேதியான நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பெண் பத்திரிகையாளர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை.. ஆப்கன் அமைச்சர் போட்ட உத்தரவு.. டெல்லியில் பரபரப்பு!
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 11 Oct 2025 07:49 AM IST

டெல்லி, அக்டோபர் 11 : அரசு முறைப் பயணமாக ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி டெல்லி வந்துள்ளார். அவர் 2025 அக்டோர் 10ஆம் தேதியான நேற்று இவரது செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 7 பெண்கள் பத்திரிகையாளர்கள் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதனால், அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையில், தலிபான்கள் அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் தலிபான்களின் அடக்குமுறையை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். ஆனால், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நல்ல உறவு உள்ளது. இப்படியான சூழலில் தான், அரசு முறை பயணமாக ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முட்டாகி தனது குழுவினருன் டெல்லி வந்தார்.

டெல்லி வந்த அவர், 2025 அக்டோபர் 10ஆம் தேதியான நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும், இந்த சந்திப்பில் காபூலில் உள்ள தூதரகம் மேம்படுத்தப்படும் என ஜெய்சங்கர் கூறினார். இதுகுறித்து பேசிய ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப பணியை தூதரக அந்தஸ்துக்கு மேம்படுத்துவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்என்றார்.

Also Read : பெண்களுக்கு குட் நியூஸ்.. 12 நாட்கள் சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு.. அதிரடி நடவடிக்கை!

பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை

தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமீர்கான் முட்டாகி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகறிது. அதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பெண் பத்திரிகையாளர்கள் தங்களது சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருக்கின்றனர்.  

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆப்கானிஸ்தான் அமைச்சர், “லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்கள் நீண்ட காலமாக ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் தலிபான்கள் அனைத்து பயங்கரவாதிகளையும் அழித்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் ஒரு அங்குல நிலம் கூட அவர்களால் கட்டுப்படுத்தப்படவில்லை.

Also Read : பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சி.. இரண்டு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..

ஆப்கானிஸ்தான் அமைதிக்காகச் செயல்பட்டது போல, மற்ற நாடுகளும் இதுபோன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் இந்தியாவை ஒரு நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது. பரஸ்பர மரியாதை, வர்த்தகம் மற்றும் மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் உறவுகளை ஆப்கானிஸ்தான் விரும்புகிறதுஎன்றார்.