சோகத்தில் முடிந்த தேன் நிலவு…ஆயிரம் கி.மீ. இடைவெளியில் புதுமண தம்பதி தற்கொலை!

Newlyweds Commit Suicide In Bangalore And Nagpur: இலங்கையில் தேன் நிலைவு கொண்டாட சென்ற புதுமண தம்பதி பெங்களூர் மற்றும் நாக்பூரில் தற்கொலை செய்து கொண்டனர். பெண்ணின் கடந்த கால உறவு கணவனுக்கு தெரிய வந்ததால் இந்த விபரீதம் நடைபெற்றது.

சோகத்தில் முடிந்த தேன் நிலவு...ஆயிரம் கி.மீ. இடைவெளியில் புதுமண தம்பதி தற்கொலை!

ஆயிரம் கி.மீ. இடைவெளியில் தற்கொலை செய்த புதுமண தம்பதி

Updated On: 

29 Dec 2025 12:18 PM

 IST

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி அண்மையில் நடைபெற்ற ஆடம்பரமான விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, அந்த ஜோடியானது இலங்கைக்கு தேன் நிலவுக்காக சென்றனர். அங்கு, தேன் நிலவு கொண்டாடி கொண்டிருக்கும் நிலையில், அந்த 26 வயது பெண்ணின் கடந்த கால உறவு குறித்து கணவருக்கு தெரிய வந்ததாம். அப்போது, இது குறித்து அந்த பெண்ணிடம், அவரது கணவர் கேட்டுள்ளார். இதில், தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் இலங்கையில் தேன் நிலவை பாதியில் கைவிட்டு விட்டு ஊர் திரும்பினர். இந்த விவகாரம் குறித்து, அந்த பெண்ணின் கணவர் தனது தாயிடம் கூறியதாக தெரிகிறது. இதனால், கணவரும், மாமியாரும் சேர்ந்து அந்த பெண்ணை சித்தரவதை செய்து வந்ததாக தெரிகிறது. மேலும், விவாகரத்து செய்யக்கோரி அந்த பெண்ணை தொந்தரவு செய்துள்ளனராம்.

மன அழுத்தத்தில் தற்கொலை செய்த இளம் பெண்

இதில், குடும்பத்தின் கெளரவம் கருதி விவாகரத்து செய்ய முடியாது என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால், கணவரும், மாமியாரும் தொடர்ந்து தொந்தரவு அளித்ததால், மன அழுத்தத்தில் இருந்து வந்த அந்த பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், கணவர் மற்றும் மாமியாரை கைது செய்யக் கோரி தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தினர் அவர்களின் வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரயில்.. ஒருவர் பரிதாப பலி.. பரபரப்பு சம்பவம்!

நாக்பூரில் தற்கொலை செய்த கணவர்

இதை அறிந்த, அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் நாக்பூருக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, அந்த பெண்ணின் கணவரும், மாமியாரும் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதில், அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்தார். அவரது மாமியார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் தாய் கூறுகையில்,

தற்கொலைக்கு தூண்டிய கணவன்-மாமியார்

எனது மகளின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் மற்றும் மாமியார் அவர்களது தவறுகளை உணர்ந்துள்ளனர். எனது மகள், அவரது கணவர் மீது அதிக அளவு பாசம் வைத்திருந்தாள். ஆனால், அநியாயமாக துன்புறுத்தி எனது மகளை தற்கொலை செய்ய தூண்டி விட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை தொடர்பான எண்ணங்கள் ஏதேனும் எழுந்தால், இலவசமாக ஆலோசனை பெறுவதற்கு 1800 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க: ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளை.. பட்டப்பகலில் துணிகரம்.. மைசூரில் பரபரப்பு!!

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு