கணவன் – மனைவி சண்டை.. 7 வயது மகளை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த தாய்!

Mother Killed Daughter In Hyderabad | தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் கணவன் - மனைவி இரண்டுபிள்ளைகள் என ஒரு குடும்பம் வசித்துள்ளது. இந்த நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனைவி தனது 7 வயது மகளை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்துள்ளார்.

கணவன் - மனைவி சண்டை.. 7 வயது மகளை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த தாய்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Dec 2025 06:56 AM

 IST

ஹைதராபாத், டிசம்பர் 18 : தெலங்கானா (Telangana) மாநிலம், மேட்சல் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது சுலைமான் எனும் டேவிட். இவருக்கு திருமணமாகி மோனாலிசா என்ற மனைவி உள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இந்த தம்பதிக்கு 10 வயதில் சாம்சன் என்ற மகனும், 7 வயதில் ஷெரோன் மேரி என்ற மகளும் இருந்துள்ளார். இவ்வாறு தம்பதியின் வாழ்க்கை சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்ற நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோனாலிசா மனநில சிகிச்சை பெற தொடங்கியுள்ளார். அதுமட்டுமன்றி, அதன் காரணமாக அவர் பிள்ளைகளிடமும் அடிக்கடி கடுமையாக நடந்துக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

மகளை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட மோனாலிசா

இந்த நிலையில், டிசம்பர் 15, 2025 அன்று தம்பதிக்கு இடையே மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஷெரோன் தாயின் செல்போனை எடுத்து கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அதனை கண்ட மோனாலிசா கோபம் தலைக்கேறியுள்ளது. இதன் காரணமாக அவர் தனது மகளிடம் எதற்கு எனது போனை எடுத்தாய் என்று கேட்டுள்ளார். அதுமட்டுமன்றி, உன்னை கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துக்கொள்கிறேன், அப்போது தான் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என கூறி தனது மகளை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.

இதையும் படிங்க : மாரடைப்பால் துடிதுடித்த கணவன்.. நடுரோட்டில் உதவிக்கேட்டு பரிதவித்த மனைவி.. மரித்த மனிதநேயம்

பலத்த காயமடைந்த சிறுமி பரிதாப பலி

மோனாலிசா தள்ளிவிட்ட நிலையில் அந்த சிறுமி படிகட்டில் விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மோனாலிசாவை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க : ரூ.1 கோடி காப்பீட்டு தொகை…வங்கியை நம்ப வைக்க கொடூர நாடகம்…ஊழியருக்கு போலீசார் காப்பு!

கணவன், மனைவி சண்டையில் பெற்ற தாயே தனது மகளை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?