ஜம்மு காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு.. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்கள்.. 38 பேர் உயிரிழப்பு
Jammu Kashmir Cloud Burst : ஜம்மு காஷ்மீரில் பயங்கர மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பால் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால், காஷ்மீரில் சசோத்தி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் அதில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில், 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

காஷ்மீரில் மேகவெடிப்பு
காஷ்மீர், ஆகஸ்ட் 14 : ஜம்மு காஷ்மீரில் பயங்கர (Kashmir Cloudburst) மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பால் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால், காஷ்மீரில் சசோத்தி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பலர் அதில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில், 38 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் வந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. வடமாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உத்தரகாண்ட், காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கூட, உத்தரகாண்டில் மேகவெடிப்பு ஏற்பட்டதல் பலரும் பாதிக்கப்பட்டன. மேலும், வீடுகள் தரைமட்டமாகின.
இந்த நிலையில், காஷ்மீரில் சஷோதி பகுதியில் 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று பயங்கர மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதில் அங்கிருந்த வீடுகள் அனைத்து அடித்து செல்லப்பட்டன. இதில் பலர் சிக்கியிருக்கலாம். கிஸ்த்வார் அருகே இமயமலை பகுதியில் மாதா சந்தி கோயிலுக்கு புனித யாத்திரைக்காக மக்கள் செல்வார்கள். இதற்கான தொடக்க பகுதியாக சசோதி உள்ளது.
Also Read ; தெருநாய்கள் தொடர்பான உத்தரவு.. உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு.. இன்று விசாரணை!
ஜம்மு காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு
STORY | Massive cloudburst in J-K’s Kishtwar, 10 dead
READ: https://t.co/Pqkh231eg3 https://t.co/h1P7G51RYS
— Press Trust of India (@PTI_News) August 14, 2025
இதனால், அங்கிருந்த பக்தர்கள் பலரும் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை 38 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், 100 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்து மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து துணை ஆணையர் கிஷ்த்வார் பங்கஜ் சர்மா கூறுகையில், “மச்சைல் மாதா யாத்திரையின் தொடக்கப் புள்ளியான கிஷ்த்வாரில் உள்ள சஷோதி பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இரண்டு குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன” என கூறினார்.
Also Read : அசாமில் நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு!
பிரதமர் மோடி இரங்கல்
My thoughts and prayers are with all those affected by the cloudburst and flooding in Kishtwar, Jammu and Kashmir. The situation is being monitored closely. Rescue and relief operations are underway. Every possible assistance will be provided to those in need.
— Narendra Modi (@narendramodi) August 14, 2025
இந்த துயரச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். மேலும், . நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது எனவும் தேவைப்படுபவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
மீட்புப் பணிகளை வலுப்படுத்துமாறு காவல்துறை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு நிறுவனங்களுக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சஷோதி கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பால் வேதனை அடைந்தேன். இதில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் காவல்துறை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்” எனக் கூறினார்.