மும்பை ரயிலில் பர்தா அணிந்து பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டல் செய்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

Man Dressed Up Like A Woman And Harassed Women Passenger | மும்பையில் மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் பெண்களை போல பர்தா அணிந்து பயணம் செய்த நபர் ஒருவர் பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை ரயிலில் பர்தா அணிந்து பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டல் செய்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டல் செய்த நபர்

Updated On: 

09 Feb 2026 12:22 PM

 IST

மும்பை, பிப்ரவரி 09 : மும்பையில் (Mumbai) மின்சார ரயிலில் (Electric Train) பெண்கள் பெட்டியில் பெண்களை போல பர்தா அணிந்து, ஆண் ஒருவர் பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் மீது சந்தேகமடைந்த பெண் பயணிகள் அவரை மடக்கி பிடித்த நிலையில், அந்த நபர் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பித்துள்ளார். மும்பையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண் வேடத்தில் பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டல் செய்த நபர்

மும்பை மத்திய ரயில் வழித்தடத்தில் பிப்ரவரி 07, 2026 அன்று சி.எஸ்.எம்.டி நோக்கி அதிவேக மின்சார  ரயில் ஒன்று சென்றுக்கொண்டு இருந்தது. இந்த ரயிலின் இரண்டாம் வகுப்பு பெண்கள் பெட்டியில் கருப்பு நிற பர்தா அணிந்து பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பர்தா அணிந்திருக்கும் பெண், சக பெண் பயணிகள் மீது உரசுவதும், தொடுவது உள்ளிட்ட தகாத செயல்களை செய்துள்ளார். இதனால், அந்த பெட்டியில் பயணித்த பெண்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : 30 ஆண்டுகள் சிறை.. நிரபராதி என கூறி விடுதலை.. அடுத்த நாளே உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?

இந்த நிலையில் தங்களுடன் பயணம் செய்வது உண்மையாகவே பெண் தானா என்பதை அறிந்துக்கொள்வதற்காக அந்த பெட்டியில் இருந்த பெண்கள் பர்தா அணிந்திருந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அப்போதுதான் அந்த பெட்டியில் தங்களுடன் பயணம் செய்வது ஒரு ஆண் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இந்த நிலையில், கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பெண்கள் அந்த நபரை சுற்றி வளைத்துள்ளனர்.

ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்ற நபர்

தான் வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்த அந்த நபர் காட்கோபர் ரயில் நிலையத்தை ரயில் நெருங்கியது கீழே குதித்து தப்பித்துள்ளார். பிறகு அவர் எதிரே வந்த மின்சார ரயிலில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், முல்லுண்டு ரயில் நிலையம் வரை அவரை தேடியுள்ளனர். அவர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சென்னையில் தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்