AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிர்வாண புகைப்படம் கேட்டு பெண்ணை தொல்லை செய்த போலி சாமியார்!

Man Continuously Disturbing Women In The Name Of Pooja | கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இளம் பெண் ஒருவரை தொடர்ப்புக்கொண்டு பேசிய நபர் சிறப்பு பூஜைக்காக நிர்வாண புகைப்படம் கேட்டு தொல்லை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாண புகைப்படம் கேட்டு பெண்ணை தொல்லை செய்த போலி சாமியார்!
தொல்லை கொடுத்த நபர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 May 2026 01:12 AM IST

பெங்களூரு, மே 04 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு (Bengaluru) தெற்கு மாவட்டத்தில் ஒரு வசித்து வருகிறார். அந்த பெண்ணின் செல்போனை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு நபர் தொடர்ப்புக்கொண்டு பேசியுள்ளார். அவர், தன்னை ராமநகர் அருகே உள்ள தொட்டமனுகுட்டே கிராமத்தை சேர்ந்த கிரண் என கூறியுள்ளார். இளம் பெண்ணிடம் தன்னை அவர் ஒரு ஜோதிடர் என்று அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார்.

சிறப்பு பூஜைக்காக நிர்வாண புகைப்படம் கேட்டு தொந்தரவு செய்த நபர்

அவர் அந்த பெண்ணிடம் தான் ஒரு சிறப்பு பூஜை செய்ய உள்ளதாகவும், அந்த பூஜைக்கு ஒரு பெண்ணின் நிர்வாண புகைப்படம் தேவை என்று கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, அந்த பெண்ணி உடலில் எங்கும் மச்சம் இருக்க கூடாது என்றும், அவ்வாறு மச்சம் இருந்தால் பூஜை பலிக்காது என்றும் கூறியுள்ளார். அதன் காரணமாக மச்சம் இல்லாத பெண்ணின் புகைப்படம் தான் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 9 பேர் உயிரிழப்பு.. ஏசி வெடித்ததே காரணம்?

அதற்காக உங்களை தேர்வு செய்துள்ளேன். உங்கள் புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். அதனை கேட்டு அந்த பெண் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். ஆனால், அவர் பெண்ணை நிர்வாண புகைப்படம் அனுப்ப கோரி செல்போன் எண்ணை அனுப்பியுள்ளார். அப்போது அவர், நிர்வாண புகைப்படத்தை அனுப்பினால் ரூ.30 லட்சம் பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவ்வாறு அவர் ஒரு மாதமாக அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதையும் படிங்க : டிஜிட்டல் கைது மோசடியால் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் பெண்.. சுடுகாடு வரை தொடர்ந்த தொந்தரவு!

காவல் நிலையத்தில் புகார் அளித்த இளம் பெண்

இவ்வாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி வந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தலைமறைவாக உள்ள அந்த போலி ஜோதிடரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us