உபியில் சுடுகாட்டில் திருமணம் செய்துக்கொண்ட காதல் ஜோடி.. விநோத சம்பவம்!
Graveyard Marriage In Uttar Pradesh | தங்களது திருமணத்தை வித்தியாசமான மற்றும் அழகான இடங்களில் நடத்த வேண்டும் என மணமக்கள் விரும்புவர். ஆனால், உத்தர பிரதேசத்தில் ஒரு ஜோடி சுடுகாட்டின் நடுவே நின்று திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
லக்னோ, மே 03 : உத்தர பிரதே (UP – Uttar Pradesh) மாநிலம், காசியாபாத்தை சேர்ந்த ஒரு ஜோடி சுடுகாட்டில் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தங்களது திருமணத்தை மிகவும் வித்தியாசமான முறையில் நடத்த வேண்டும் என நினைத்த அந்த ஜோடி இதனை செய்துள்ளது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் இளம் ஜோடி சுடுகாட்டில் திருமணம் செய்துக்கொண்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுடுகாட்டில் திருமணம் செய்துக்கொண்ட ஜோடி
தங்களது திருமணம் மிகவும் த்ரில் மிகுந்ததாக இருக்க வேண்டும் என நினைத்த அந்த ஜோடி, தங்களது திருமணத்தை நடத்த திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களை தவிர்த்துவிட்டுள்ளன. மாறாக அவர்கள் சுடுகாட்டில் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றங்கரைக்கு அருகே அமைந்துள்ள சுடுகாட்டை தேர்வு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : சந்தேகம்.. மனைவியை கடற்கரைக்கு அழைத்துச் சென்று கொன்ற கணவன்.. தவிக்கும் 4 மாத பச்சிளம் குழந்தை!
சுடுகாட்டுக்கு நடுவே தாலி கட்டி திருமணம்
அவர்கள் தாங்கள் தேர்வு செய்த சுடுகாட்டின் நடுவே நின்று திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இந்த திருமணத்திற்கு மணமக்கள் சார்பில் 50 விருந்தினர்கள் பங்கேற்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.