Mallikarjun Kharge: எனது கடின உழைப்பு வீண்! மிஸ் ஆன முதல்வர் பதவி.. வருத்ததுடன் பேசிய மல்லிகார்ஜூன கார்கே!

Mallikarjun Kharge's 1999 Karnataka CM Loss: 1999ம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும், மல்லிகார்ஜூன கார்கேவிற்கு பதிலாக எஸ்.எம். கிருஷ்ணா முதலமைச்சரானது குறித்து கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்தும், 4 மாதங்களே கட்சியில் இருந்த கிருஷ்ணாவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது தனது உழைப்பை வீணாக்கியது என அவர் கூறியுள்ளார்.

Mallikarjun Kharge: எனது கடின உழைப்பு வீண்! மிஸ் ஆன முதல்வர் பதவி.. வருத்ததுடன் பேசிய மல்லிகார்ஜூன கார்கே!

மல்லிகார்ஜூன கார்கே

Published: 

28 Jul 2025 08:30 AM

கர்நாடகா, ஜூலை 28: கடந்த 1999ம் ஆண்டு கர்நாடகாவின் முதலமைச்சராக வர முடியாமல் போனது குறித்து காங்கிரஸ் (Congress) தலைவர் மல்லிகார்ஜூன கார்கே (Mallikarjun Kharge) தற்போது மனம் திறந்துள்ளார். அதில், கடந்த 1999ம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் கட்சி அங்கு வெற்றி பெற்றபோது, 4 மாதங்களுக்கு முன்புதான் கட்சியில் இணைந்த எஸ்.எம்.கிருஷ்ணா (S. M. Krishna) முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஒரு புதிய நபர் வந்து முதலமைச்சராக ஆனதால், தனது கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டது என்று நினைத்தேன் என வருத்தமாக பேசினார்.

கார்கே சொன்னது என்ன..?

விஜயபுராவில் நடந்த ஒரு விழாவில் உரையாற்றிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “ நான் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டேன். கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர கடுமையாக உழைத்தேன். இறுதியில் எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு அமைந்தது, ஆனால் அதற்கு 4 மாதங்களுக்கு முன்புதான் காங்கிரஸில் இணைந்த எஸ்.எம். கிருஷ்ணா முதலமைச்சரானார்.

ALSO READ: சித்தராமையா தான் முதல்வர்.. குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி – சித்தராமையா மற்றும் டி.கே சிவகுமார் சொன்ன விஷயம்..

எங்கள் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டது. நான் 5 ஆண்டுகள் கடினமாக உழைத்தேன். கிருஷ்ணா 4 மாதங்களுக்கு முன்பு வந்து முதலமைச்சரானார். இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் ஒன்றாகப் பேசுவது சரியாக இருக்காது.

கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 224 இடங்களில் 132 இடங்களை வென்றது. அப்போது, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பதிலாக எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடகாவின் 16வது முதலமைச்சராக பதவியேற்றார்.

கார்கே எந்தெந்த பதவிகளை வகித்தார்?

கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மல்லிகார்ஜுன கார்கே, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக பதவி வகித்தார். எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் அடுத்தடுத்த காங்கிரஸ் முதலமைச்சர்களின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராகப் பணியாற்றினார். அதற்கு ஒரு வருடம் முன்பு, அவர் மத்திய ரயில்வே மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சராகவும் பணியாற்றினார்.

காங்கிரஸ் தலைவராக கார்கே:

2022ம் ஆண்டு திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரை அமோக வெற்றி பெற்று தோற்கடித்து கார்கே காங்கிரஸ் தலைவரானார். கார்கே 7,987 வாக்குகளுடனும், அதே நேரத்தில் தரூர் 1,072 வாக்குகளைப் பெற்று, கட்சி உயர்மட்டக் குழு மற்றும் ஆதரவாளர்களின் வலுவான ஆதரவைப் பெற்றிருப்பதை கார்கே நிரூபித்தார். அவரது வெற்றியைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 24 ஆண்டுகளில் காந்தி குடும்பத்திற்கு வெளியே உள்ள முதல் கட்சித் தலைவரானார் கார்கே.

ALSO READ: இந்தியா கூட்டணிக்கு குட்பை.. அதிர்ச்சி கொடுத்த ஆம் ஆத்மி.. அரசியலில் பரபரப்பு!

காங்கிரஸின் தேசியத் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி வகித்த காலத்தில், 2024 மக்களவைத் தேர்தலில் கட்சி 99 இடங்களை வென்றது. இது 2019 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது சுமார் 50 இடங்கள் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.