Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சித்தராமையா தான் முதல்வர்.. குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி – சித்தராமையா மற்றும் டி.கே சிவகுமார் சொன்ன விஷயம்..

Karnataka CM Siddharamaiah: கர்நாடகா அரசியலில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த விதமான குழப்பமும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தும் வகையில், சித்தராமையாவும், டி.கே சிவகுமாரும் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

சித்தராமையா தான் முதல்வர்.. குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி – சித்தராமையா மற்றும் டி.கே சிவகுமார் சொன்ன விஷயம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jun 2025 14:07 PM

கர்நாடகா, ஜூன் 30, 2025: கர்நாடக அரசியலில் பெரும் குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் கர்நாடக முதல்வர் சுந்தரராமாயாவும் துணை முதல்வர் டி.கே சிவக்குமாரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்திருப்பது தற்போது அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி உட்கட்சி விவகாரம் காரணமாக தலைமை மாற்றப்படும் என பல்வேறு வதந்திகள் பரவியது. அதனை தொடர்ந்து இந்த நிகழ்வானது நடந்துள்ளது. 2023 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் சிவகுமார்ன் இருவருக்கும் இடையே மறைமுகப் போட்டி நிலவை வந்தது. கடைசியாக பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கர்நாடகாவின் முதலமைச்சராக சீத்தாராமையா இருப்பார் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து துணை முதலமைச்சராக டி கே சிவகுமார் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டது.

கர்நாடகா அரசியலில் நிலவிய குழப்பம்:

சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் முதலமைச்சர் தொடர்பான பேச்சுக்கள் அடிபட்டது. உட்கட்சி விவகாரம் தொடர்பாக பதவியில் மாற்றம் செய்யப்படும் என பல்வேறு கருத்துக்கள் வெளியானது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர் வி தேஷ்பாண்டே சித்தராமையா முதல்வராக தொடர்வார் என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.

இருவரும் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பு:


அதனை தொடர்ந்து சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சித்தராமையா, டி.கே சிவகுமாரின் கையைப் பிடித்த இருவரும் சிரித்துக்கொண்டே, “ எங்கள் அரசாங்கம் 5 ஆண்டுகள் நீடிக்கும், யாரும் அசைக்க முடியாத ஒரு பாறை போல் இருக்கும். நாங்கள் மீண்டும் ஒன்றாக வருவோம்” என குறிப்பிட்டிருந்தார்

அதாவது ஐந்து ஆண்டுகால ஆட்சியில் சித்தாராமையா முதலமைச்சராக தொடர்வார் என்றும் அவரை மாற்றுவதற்காக எந்த முன்மொழிவு அல்லது எந்த விவாதமோ நடத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டமன்ற கட்சி கூட்டத்தில் இந்த தலைப்பு தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை எனவும் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாகவே இருப்பதாகவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது