Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைரல் வீடியோவால் தற்கொலை செய்துக்கொண்ட நபர்.. வீடியோ வெளியிட்ட பெண்ணை வலைவீசி தேடும் போலீஸ்!

Non Bailable Case Filed On Shimjitha | கேரளாவை சேர்ந்த ஷிம்ஜித்தா என்ற இளம் பெண், தீபக் என்ற நபர் பேருந்தில் தன்னை பாலிய சீண்டலுக்கு உள்ளாக்கியதாக வீடியோ வெளியிட்ட நிலையில், அந்த நபர் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தற்போது தலைமறைவாக உள்ளார்.

வைரல் வீடியோவால் தற்கொலை செய்துக்கொண்ட நபர்.. வீடியோ வெளியிட்ட பெண்ணை வலைவீசி தேடும் போலீஸ்!
இடது - தற்கொலை செய்துக்கொண்ட தீபக் வலது - வீடியோ வெளியிட்ட ஷிம்ஜித்தா
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Jan 2026 13:03 PM IST

கோழிக்கோடு,  ஜனவரி 20 : கேரளா (Kerala) மாநிலம், கோழிக்கோடு பகுதை சேர்ந்த 42 வயது  தீபக் என்ற நபர் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டடதாக வெளியான வீடியோவை தொடர்ந்து அந்த நபர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில், தற்கொலை செய்துக்கொண்டார். அவரது தற்கொலை நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த வீடியோ எடுத்து வெளியிட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் பலி

ஜனவரி 16, 2026 அன்று கேரளாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது சமூக வளைத்தள பக்கங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில், பேருந்தில் பயணம் செய்தபோது தன்னை ஒருவர் பாலியல் சீண்டல் செய்ததாக கூறியிருந்தார். அந்த வீடியோவில், தீபக் என்ற 42 வயது நபர் இளம் பெண்ணின் அருகில் நின்றுக்கொண்டு இருப்பதும், இளம் பெண் மீது இடிக்கும் சில காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இந்த வீடியோ மிக வேகமாக வைரலானதை தொடர்ந்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளான தீபக் தற்கொலை செய்துக்கொண்டார். அவரது மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இணையத்தில் வைரலான வீடியோ

இதையும் படிங்க : லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து இரும்பு பெட்டியில் வைத்து எரித்த நபர்.. உ.பியில் பகீர் சம்பவம்!

தீபக்குக்கு ஆதரவாக களமிறங்கிய இணைய வாசிகள்

அந்த வீடியோவை வைத்து பார்க்கும்போது தீபக் மீது எந்த வித தவறும் இல்லாதது போல் தோன்றுகிறது. கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்தில் இவை இயல்பான ஒன்று. தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அந்த பெண் இவ்வாறு சித்தரிக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். தான் வெளியிட்ட வீடியோ தனக்கே எதிராக மாறியா நிலையில், வீடியோ வெளியிட்ட ஷிம்ஜித்தா தலைமறைவாகியுள்ளார்.

இதையும் படிங்க : பேருந்தில் பாலியல் சீண்டல் செய்ததாக வீடியோ வெளியிட்ட பெண்.. குற்றம்சாட்டப்பட்ட நபர் விபரீதம்!

இந்த நிலையில், தலைமறைவாக உள்ள அவர் மீது ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள கேரளா போலீசார், அவரை வலைவீசி தேடி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.