பஹல்காம் தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை…பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டிய இந்தியா!
Pahalgam Attack To Operation Sindoor: ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காம் கொடூர தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வரை நடைபெற்ற இந்தியாவின் அதிரடி நிகழ்வுகளை "2025 மீள் பார்வை" என்பதன் அடிப்படையில் இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

பஹல்காம் தாக்குதல் டூ ஆபரேஷன் சிந்தூர் வரை
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஏப்ரல் 22- ஆம் தேதி பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் திடீரென சுற்றுலா பயணிகள் மீது சரமாரியான துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 வெளிநாட்டினர், கப்பல் படை அதிகாரி உள்பட 26 சுற்றுலா பயணிகள் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையாகினர். இதில், ஒரு பெண் தவிர மற்ற அனைவரும் ஆண்களே கொல்லப்பட்டனர். அப்போது, கணவனை இழந்த ஒரு பெண்ணிடம் பயங்கரவாதி ஒருவர் இந்த சம்பவத்தை உங்கள் நாட்டுப் பிரதமரிடம் போய் சொல் என்று கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவ்வளவு கொடூரமான சம்பவத்தை நாம் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்கமாட்டோம். மறக்கவும் முடியாது.
பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த ராஜாங்க நடவடிக்கை
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்த நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, பாகிஸ்தானில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது. இந்தியாவில் இருந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. இந்தியாவில் மருத்துவம், கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக தங்கி இருந்த பாகிஸ்தானியர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைத்தது.
மேலும் படிக்க: யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி – மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் சூழல்
இதிலும் குறிப்பாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது என்பன உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதனால், பாகிஸ்தான் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இதனிடையே, பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போர் மூளும் சூழல் உருவானது. அதன்படி, இரு நாடுகளும் தங்களது எல்லைகளின் ராணுவ தளவாடங்களை குவித்ததுடன் இரு நாட்டு ராணுவமும் மாறி மாறி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டிய இந்தியா
அப்போது, இந்தியாவில் போர் ஒத்திகை மேற்கொள்ள இருப்பதாக பாகிஸ்தானின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு, இரவோடு இரவாக பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் அதிரடியாக இறங்கியது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்திய அதிரடி துப்பாக்கி சூட்டில் லஸ்கர்- இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி உள்பட 100 பயங்கரவாதிகள் துவம்சம் செய்யப்பட்டனர். மேலும், 100- க்கும் மேற்பட்ட பயங்கரவாத முகாம்கள் அளிக்கப்பட்டன.
26 பேரின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கும் வகையில்…
அத்துடன், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளின் வீடுகளும் இந்திய ராணுவத்தினர் வெடி வைத்து தகர்த்தனர். இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலை எதிர்பாராத பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நடவடிக்கையின் மூலம் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு நீதி கிடைக்கும் வகையில் அமைந்தது “ஆபரேஷன் சிந்தூர்”.
மேலும் படிக்க: நாடாளுமன்றத்தில் இ-சிகரெட்.. சபாநாயகரிடம் அனுராக் தாக்கூர் புகார்!