Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Parliament: நாடாளுமன்றத்தில் இ-சிகரெட்.. சபாநாயகரிடம் அனுராக் தாக்கூர் புகார்!

BJP MP Anurag Thakur: அனுராக் தாக்கூரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பாஜக எம்.பிக்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது நேரம் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து எம்.பி.க்களும் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்து, நாடாளுமன்றத்தின் ஒழுக்கத்தை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Parliament: நாடாளுமன்றத்தில் இ-சிகரெட்.. சபாநாயகரிடம் அனுராக் தாக்கூர் புகார்!
பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Dec 2025 14:50 PM IST

நாடாளுமன்ற (Parliament) குளிர்கால கூட்டத்தொடரில் நிதியமைச்சருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மக்களை வளாகத்திற்குள் திரிணாமுல் எம்.பி ஒருவர் இ-சிகரேட் பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சி எம்.பி. அனுராக் தாக்கூர் (Anurag Thakur) இன்று அதாவது 2025 டிசம்பர் 11ம் தேதி மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஒருவர் இ-சிகரெட் புகைப்பதாக குற்றம் சாட்டினார். கேள்வி நேரத்தின் போது, ​​சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், இ-சிகரெட்டுகள் சபையில் அனுமதிக்கப்படுகிறதா என்று கேட்டு தாக்கூர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ALSO READ: டெல்லி தேர்தல் ஒரு ரீவைண்ட்…வியூகத்துடன் வீசிய பாஜக புயல்…வேரூடம் பிடுங்கி வீசப்பட்ட ஆம் ஆத்மி!

மறுப்பு தெரிவித்த ஓம் பிர்லா:


பாரதிய ஜனதா கட்சி எம்.பி. அனுராக் தாக்கூர், “இந்தியாவில் இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை அவைக்குத் தெரியப்படுத்துவதற்காக இவற்றை இங்கு கூறுகிறேன். மக்களவை சபாநாயகரிடம், சபையில் இ-சிகரெட்டுகள் புகைக்க அவர் அனுமதித்துள்ளாரா என்று நான் கேட்க விரும்புகிறேன். ஒரு டிஎம்சி எம்.பி. மக்களவைக்குள் பல நாட்களாக இ-சிகரெட்டுகள் புகைத்து வருகிறார்” என்று தெரிவித்தார். தாக்கூர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தபோது, பிர்லா இதற்கு மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து தாக்கூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் பல நாட்களாக அவையில் இ-சிகரெட்டுகள் புகைத்து வருவதாக கூறினார்.

அனுராக் தாக்கூரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பாஜக எம்.பிக்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிது நேரம் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அனைத்து எம்.பி.க்களும் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்து, நாடாளுமன்றத்தின் ஒழுக்கத்தை மதிக்க வேண்டும் என்றும் கூறினார். இதுபோன்ற ஏதேனும் விஷயம் தனது கவனத்திற்கு வந்தால், விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் இ-சிகரெட் எப்போது தடை செய்யப்பட்டது..?

இந்தியாவில் மின்னணு சிகரெட்டுகள் (தடை) சட்டம், 2019 இன் கீழ் இந்தியா மின்-சிகரெட்டுகளை தடைசெய்தது. அதன்படி, இ-சிகரெட்டின் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் விளம்பரம் சட்டவிரோதமானது, மீறல்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

ALSO READ: இந்திய குடியுரிமை பெறும் முன்பே, வாக்களார் பட்டியலில் சோனியா காந்தி பெயர்… அமித் ஷா குற்றச்சாட்டு

நாடாளுமன்றம் மட்டுமின்றி, இந்தியாவில் பொது இடங்களில் புகைபிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வேறு எந்த நபரும் புகைபிடிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்குள் புகைபிடிக்கும் அறை மூடப்பட்டது கணிசமான சர்ச்சையை ஏற்படுத்தியது, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்போதைய சபாநாயகருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.