Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டெல்லி தேர்தல் ஒரு ரீவைண்ட்…வியூகத்துடன் வீசிய பாஜக புயல்…வேரூடம் பிடுங்கி வீசப்பட்ட ஆம் ஆத்மி!

Delhi Assembly Election: டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடந்த 27 ஆண்டுகளாக நடைபெறாத மாற்றமும், அந்த மாற்றத்துக்கு இடம் அளிக்காத ஆம் ஆத்மி கட்சியும் சந்தித்த நிலை குறித்து இந்தப் பதிவில் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

டெல்லி தேர்தல் ஒரு ரீவைண்ட்…வியூகத்துடன் வீசிய பாஜக புயல்…வேரூடம் பிடுங்கி வீசப்பட்ட ஆம் ஆத்மி!
டெல்லி சட்டமன்ற தேர்தல் ரீவைண்ட்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 10 Dec 2025 17:12 PM IST

டெல்லியில் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 5- ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் கடுமையான போட்டி நிலவியது. இந்த தேர்தலில் தலைநகர் டெல்லியை தன் வசம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மாபெரும் சக்கர வியூகம் அமைத்தனர். அதன்படி, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. டெல்லி முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தா பொறுப்பேற்றார். இந்தத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளிலும், பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

டெல்லி அரசியலில் வேரூன்றி இருந்த ஆம் ஆத்மி

கடந்த 2015- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 3 தொகுதிகளையும், கடந்த 2020-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. டெல்லி அரசியலில் ஆம் ஆத்மி கட்சி அசைக்க முடியாத அளவுக்கு வேரூன்றி இருந்தது. ஆனால், தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் டெல்லி அரசியலில் ஆலமரம் போல வேரூன்றி இருந்த ஆம் ஆத்மி கட்சியை புயலாக வந்த பாரதீய ஜனதா கட்சி வேரூடன் பிடுங்கி வீசியது.

மேலும் படிக்க: 2027-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாகிறது…முழு விவரம்!

27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அரியணை ஏறிய பாஜக

இந்த தேர்தல் மூலம் கடந்த 27 ஆண்டுகளாக டெல்லியில் கோலுச்ச முடியாமல் இருந்து வந்த பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் தனது ராஜாங்க ஆட்சியை அமல்படுத்தியது. இதில், கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் டெல்லியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த ஆம் ஆத்மி கட்சி பெருத்த தோல்வியை சந்தித்தது. இதில், கடந்த இரண்டு ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்து வந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 3-ஆவது முறையாக முதல்வர் பதவியில் அமரும் கனவில் இருந்தவருக்கு பெருத்த தோல்வியை கிடைத்தது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதமும் 10 சதவீதம் குறைந்துள்ளது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கெஜரிவால்

அதாவது, கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில் 53.57 சதவீதமாக இருந்த வாக்கு சதவீதம், 2025 சட்டமன்றத் தேர்தலில் 43.55 சதவீதமாக குறைந்தது. இந்த சரிவானது ஆம் ஆத்மி வெற்றி பெற்ற தொகுதிகளிலும் எதிரொலித்தது. இந்த தேர்தலுக்கு முன்பு மதுபான கொள்கை வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அப்போது, தனக்கு எதிராக மத்திய அரசு ஜோடித்த இந்த வழக்கில் தன் மீது குற்றச்சாட்டு இருந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் டெல்லி மக்கள் சிறப்பான நீதியை வழங்குவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

டெல்லி அரசியிலில் ஆம் ஆத்மிக்கு பெருத்த அடி

ஆனால், அவரது துரதிருஷ்டவசம் அவர் மீண்டும் முதல்வர் என்ற ராஜ நாற்காலியில் அமர முடியாமல் போனது. இருந்தாலும், இந்திய தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்து வந்த ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி அரசியலில் மிகப் பெருத்த அடியாகவே கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

மேலும் படிக்க: யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி – மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி