Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2027-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாகிறது…முழு விவரம்!

India Census To Go Digital: இந்தியாவில் வரும் 2027- ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

2027-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாகிறது…முழு விவரம்!
டிஜிட்டல் மயமாகும் மக்கள் தொகை கணக்கெடுப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 10 Dec 2025 10:52 AM IST

இந்தியாவில் கடந்த 2011- ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த 2021- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2019-ல் உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து, இந்தியாவிலும் அதன் கோரத்தாண்டவத்தை காண்பித்தது. இதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது. இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை டிஜிட்டல் முறையில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செல்போனில் உள்ள செயலி மூலம் தரவுகள் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2027- இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. 2026- ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை வீடுகளின் பட்டியல், வீடுகளின் வரைபடம், இதைத் தொடர்ந்து, 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

டிஜிட்டல் மயமாகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு

இதில், கடந்த 1931- ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பட்டியல் இன சமுதாயம் மற்றும் பட்டியல் இன பழங்குடியினர் மட்டுமின்றி அனைத்து சமுதாயங்களுக்கும் சாதி கணக்கீடு உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் மாயமாக்கப்பட உள்ளதால் முன்பு இருந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு அதற்கான முடிவுகளை வெளியிடுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலமும் குறைய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: பீகார் தேர்தல் ஒரு கண்ணோட்டம்…எதிர்கட்சி அந்தஸ்தை பெறாத கட்சி…தனிப்பெரும்பான்மை பெற்ற தேஜகூட்டணி!

தவறுகள் நிகழ்வது கணிசமாக குறைய வாய்ப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட காரணத்தால் தரவு பதிவேற்றம் குறைந்தது 10 நாட்களிலும் இறுதி அட்டவணை படுத்தப்பட்ட தரவு 6 முதல் 9 மாதங்களுக்குள் சுலபமாக முடிக்கப்படலாம். மேலும், 2027 புள்ளி விவரங்களை 2029 நாடாளுமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணயம் மற்றும் நிதி மற்றும் நலத் திட்டங்களில் மிகவும் துல்லியமான ஒதுக்கீடு போன்ற முக்கியமான முடிவுகளில் அமைக்க வகையில் உள்ளது. உள் அமைக்கப்பட்ட சரிபார்ப்புகள், முன் குறியிடப்பட்ட பதவி விருப்பங்கள், கட்டாய புவி குறியீடுதல் மற்றும் வீடுகள் சுயமாக கணக்கிடும் திறன் ஆகியவை தவறுகள் நிகழ்வதை கணிசமாக குறைக்க வாய்ப்பு உள்ளது.

பல கோடி ரூபாய் சேமிக்க வாய்ப்பு

குறிப்பாக புலம்பெயர்ந்த மற்றும் கிராமப்புற மக்களிடையே இடம் பெயர்வு முறைகளை துல்லியமாக கண்காணிப்பது, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வள விநியோகத்தையும் மேம்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக அரசு டேப்லெட்டுகளை கொள்முதல் செய்வதற்கான தேவை இல்லாமல் போகிறது. இதனால், பல கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது. மொத்தத்தில், டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பல்வேறு நன்மைகளை வழங்கும் வகையில் உள்ளது என்று உள்துறை துணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: இறுதிக்கட்டத்தை எட்டிய SIR பணிகள்.. படிவங்களை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்.. மக்களே கடைசி வாய்ப்பு!!