Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உ.பியில் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துக்கொண்ட இளம் பெண்!

Young Woman Married Krishnar Statue | உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். கிருஷ்ணர் மீது அதீத பற்று கொண்டு இருந்த அந்த இளம் பெண் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

உ.பியில் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துக்கொண்ட இளம் பெண்!
கிருஷ்ணர் சிலையுடன் திருமணம் செய்துக்கொண்ட இளம் பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Dec 2025 07:14 AM IST

லக்னோ, டிசம்பர் 10 : முன்பெல்லாம் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் திருமணம் செய்துக்கொள்வது தான் இயல்பானதாக இருந்தது. பெரும்பாலான நபர்கள் அவ்வாறு தான் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் ஆண், பெண் மட்டும் தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறைகள் எதுவும் இல்லை. மனிதர்கள் தங்களுக்கு பிடித்த நபர்களை திருமணம் செய்துக்கொள்கின்றனர். அந்த வகையில், உத்தர பிரதேசத்தை (UP – Uttar Pradesh) சேர்ந்த இளம் பெண் ஒருவர் கிருஷணர் சிலையை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இது தற்போது பேசுபொருளாக உள்ளது.

கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துக்கொண்ட இளம் பெண்

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிங்கி என்ற 28 வயது இளம் பெண் கிருஷ்ணர் மீது தான் கொண்டு இருந்த அதீத பக்தியின் காரணமாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அவர் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அவர் சமீபத்தில் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்ற நிலையில் சிலை மீது தங்க மோதிரம் விழுந்ததாகவும், தனக்கு காய்ச்சல் வந்த நிலையில், கிருஷ்ணருக்கு பூஜை செய்தவுடன் குணமடைந்துவிட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். தனக்கு நடந்த இந்த விஷயங்கள் அனைத்தும் கிருஷ்ணர் கொடுத்த அறிகுறிகள் என நம்பும் அந்த பெண் அவரையே திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : ஆசை ஆசையாக கோழிக்கறி குழம்பு சாப்பிட்ட ஆட்டோ ஓட்டுநர்.. தொண்டையில் சிக்கி பரிதாப பலி!

உலகம் முழுவதும் அதிகரிக்கும் விநோத திருமணங்கள்

மனிதர்களின் வாழ்கை முறை முற்றிலுமாக மாறிவிட்டது. அவர்கள் தங்களது சுய விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கிவிட்டனர். முன்பெல்லாம் ஆண் மற்றும் பெண் திருமணம் செய்வது மட்டுமே முறையான திருமணமாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அனைத்தும் மாறிவிட்டது. ஆண் – ஆண் திருமணம், பெண் – பெண் திருமணம், மூன்றாம் பாலினத்தவர்கள் திருமணம் என மனிதர்கள் தங்களுக்கு பிடித்தவர்களை திருமணம் செய்துக்கொள்ளும் மாற்றம் வந்துள்ளது.

இதையும் படிங்க : போலி மருந்து விவகாரம்…தமிழகத்தில் 34 மருந்தகளை ஆய்வு செய்ய உத்தரவு!

அதிலும் குறிப்பாக சிலர் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை திருமணம் செய்வது, பொம்மைகள், ரோபோட்கள் என மிகவும் வித்தியாசமான திருமணங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், இளம் பெண் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துக்கொண்டது பேசுபொருளாக மாறியுள்ளது.