India – Pakistan Tension: பஹல்காம் தாக்குதல் முதல் சண்டை நிறுத்தம் வரை.. பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்டு கார்கே, ராகுல் கடிதம்!
Special Parliament Session: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதை அடுத்து, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துர் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். எதிர்க்கட்சிகள் இதற்கான ஒருமித்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ள கூட்டு முயற்சி அவசியம் எனக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெல்லி, மே 11: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு (India – Pakistan Tensions) இடையே நிலவி வந்த துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக இரு நாடுகளுக்கு நேற்று அதாவது 2025 மே 10ம் தேதி மாலை அறிவித்தது. இந்த சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் (Rahul Gandhi), மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் (Mallikarjun Kharge) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினர். அந்த கடிதத்தில் பஹல்காம் தாக்குதல், இந்திய இராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்கா சம்பந்தப்பட்ட போர் நிறுத்த அறிவிப்பு ஆகியவற்றை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு குறிப்பிட்டு இருந்தனர்.
ராகுல் காந்தி கடிதம்:
இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில், “ நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதன்முதலில் அறிவித்த போர்நிறுத்தம் குறித்து மக்களும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விவாதிப்பது மிகவும். எனவே, எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள நமது கூட்டு உறுதியை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
மல்லிகார்ஜூன கார்கே கடிதம்:
Lok Sabha LoP Rahul Gandhi (@RahulGandhi) and Rajya Sabha LoP Mallikarjun Kharge (@kharge) write to PM Modi for special session of Parliament to discuss the Pahalgam attack, ‘Operation Sindoor’ and the ceasefire announcement by the US. pic.twitter.com/eo5LfkLzIm
— Press Trust of India (@PTI_News) May 11, 2025
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தை கூட்ட கோரிய ராகுல் காந்தியின் கடிதத்தை ஆதரித்து மல்லிகார்ஜூன கார்கே இன்று அதாவது 2025 மே 11ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், “சமீபத்திய முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சி தலைவரான மக்களவை, பஹல்காம் பயங்கரவாதம், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் முதலில் வாஷிங்டன் டிசியில் இருந்து பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் உங்களுக்கு எழுதியுள்ளது. மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவராக, இந்த கோரிக்கையை ஆதரித்து நான் எழுதுகிறென். இதற்கு நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.