கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு காலம் 45 நாட்களாக உயர்வு – மத்திய அரசு நடவடிக்கை
Rural LPG Rule : கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு முன்பதிவு காலம் 25 நாட்களில் இருந்து 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 12, 2026 அன்று வியாழக்கிழமை வெளியானது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாதிரி புகைப்படம்
சமையல் எரிவாயு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், இந்த பிரச்னையை சரிசெய்ய மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன் படி கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து காத்திருக்கும் காலத்தை 45 நாட்களாக உயர்த்தியுள்ளது. முன்பு இது 25 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு மார்ச் 12, 2026 அன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சமையல் எரிவாயு முன்பதிவு காலம் 45 நாட்களாக உயர்வு
நாடு முழுவதும் சமையல் எரிவாயு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் வணிக பயன்பாடுகளுக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி எரிவாயு முன்பதிவு செய்து காத்திருக்கும் காலத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி கிராமப்புறங்களில் 25 நாட்களாக இருந்த காத்திருப்பு காலத்தை 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 12, 2026 அன்று வியாழக்கிழமை வெளியானது.
இதையும் படிக்க : போதிய எரிவாயு கையிருப்பு உள்ளது.. மக்கள் அச்சப்பட வேண்டாம் – முதல்வர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்..
முன்பு ஒருமுறை சமையல் எரிவாயுவு முன்பதிவு செய்து 21 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சமையல் எரிவாயு முன்பதிவு செய்யும் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்கு ஆசிய பகுதியில் போர் பதற்றம் காரணமாக எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் முன்பதிவு செய்து காத்திருப்பு காலத்தை 25 நாட்களாக மாற்றி உத்தரவுகளை பிறப்பித்தது. இருப்பினும், நாட்டில் சமையல் எரிவாயு தேவை அதிகரித்து வருவதால், அதை மீண்டும் நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எரிவாயு விநியோகம் தடையில்லாமல் கிடைக்கவும், சந்தைகளில் விற்கப்படுவதை கட்டுப்படுத்த முடியும் என்ற காரணத்தால் மத்திய அரசு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் எரிவாயு பற்றாக்குறை நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக வணிக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தை மத்திlய அரசு நிறுத்தியுள்ளது. இதன் விளைவாக தற்போது ஹோட்டல்கள் தங்கள் உணவு பட்டியலை குறைத்து வருகின்றன. பெரும்பாலான ஹோட்டல்கள் விறகுக்கு மாறி வருகின்றன. இதனால் விறகுகளின் விலை அதிகரித்துள்ளது. மதுரையில் 1 கிலோ விறகின் விலை ரூ.150ல் இருந்து 300 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க : எல்பிஜி தட்டுப்பாடு.. ரயில்வே கேட்டரிங் பாதிக்கப்படுமா? நிலமை என்ன?
மேலும் இந்த நிலை தொடர்ந்தால் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஹோட்டல்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். மேலும் ஹோட்டல்களை நம்பி இருக்கும் ஜொமேட்டோ, ஸ்விகி ஊழியர்களும் இதனால் பாதிக்கப்படுவர். விடுதிகளும் மூடப்பட வாய்ப்புள்ளதால் பெரு நகரங்களில் வசிக்கும் ஊழியர்களும் மாணவர்களும் கலக்கத்தில் உள்ளனர்.