முதுகு வலியால் விடுப்பு கேட்ட ஊழியர்… அடுத்த 10 நிமிடத்தில் இதய செயலிழப்பால் மரணம்… என்ன நடந்தது?

Sudden Health Shock: முதுகு வலி என தன் மேனேஜரிடம் விடுப்பு கேட்ட ஊழியர் அடுத்த 10 நிமிடங்களில் இதய செயலிழப்பால் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதுகு வலியால் விடுப்பு கேட்ட ஊழியர்... அடுத்த 10 நிமிடத்தில் இதய செயலிழப்பால் மரணம்... என்ன நடந்தது?

மாதிரி புகைப்படம்

Published: 

15 Sep 2025 20:55 PM

 IST

மனித வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. 40 வயதான ஊழியர் ஒருவர் தனது மேனேஜருக்கு உடல் நலக்குறைவு காரணமாக விடுப்பு கேட்ட 10 நிமிடங்களில் இதயம் செயலிழப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  செப்டம்பர் 13, 2025 அன்று காலை சங்கர் என்பவர் தனது மேனேஜர் கேவி ஐயர் என்பவருக்கு, தனக்கு முதுகு வலி (Back Pain) இருப்பதாகவும் என்னால் இன்று பணிக்கு வர இயலாது என்றும் மேசெஜ் அனுப்பியிருக்கிறார். அதற்கு கேவி ஐயரும் சரி ஓய்வெடுங்கள் என பதிலளித்திருக்கிறார். ஆனால் அடுத்த 10 நிமிடங்களில் இதய செயலிழப்பால் உயிரிழந்திருக்கிறார்.

இதய செயலிழப்பால் உயரிழந்த ஊழியர்

கேவி ஐயர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தபோது, அவருக்கு அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் உருவர், சார் சங்கர் இறந்து விட்டார் என சொல்லியிருக்கிறார். ஆனால் கேவி ஐயர் முதலில் அதனை நம்பவில்லை. தகவலை உறுதிபடுத்த சங்கரின் வீட்டுக்கு சென்றபோது, அந்த அதிர்ச்சி உண்மை என தெரிய வந்தது.

இதையும் படிக்க : பாட்டில் மூடியை விழுங்கிய சிறுவன்.. துடிதுடித்து இறந்து போன சோகம்..

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், செப்டம்பர் 13, 2025 அன்று காலை எனக்கு முதுகு வலி என சங்கர் விடுப்பு கேட்டார். நான் அவரை ஓய்வெடுங்கள் என்று சொல்லிவிட்டேன். ஆனால் காலை 11 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டார் என எனக்கு செய்தி வந்தது. முதலில் நம்பவில்லை. ஆனால் பின்னர் உறுதிபடுத்தியபோது அது உண்மை என தெரியவந்தது. இது என் வாழ்நாளில் மிகப்பெரிய அதிர்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

மேனேஜர் வெளியிட்ட பதிவு

 

சங்கர் தொடர்ந்து 6 ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். புகைப்பழக்கம், மது பழக்கம் போன்ற பழக்கங்கள் எதுவும் இல்லாதவர். ஒழுங்காக வாழ்க்கை வாழ்நதவர். திருமணமாகி அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அவரது திடீர் மரணமம வாழ்க்கையின் மீது கேள்வி எழுப்புகிறது.

சமூக வலைத்தளங்களில் எதிரொலி

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில பயனர்கள், இதய நோயின் ஆரம்ப அறிகுறிகள் முதுகுவலி, இடது தோள்பட்டை வலி, களைப்பு, வாந்தி உணர்வு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அனுக வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையும் படிக்க : திருமணமான 4 மாதம்.. வரதட்சணை கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு!

மற்றொரு பயனர் வாழ்க்கை நிச்சயமற்றது. நாமெல்லாம் சிறிய விஷயங்களுக்காக சண்டை போடுகிறோம். பிறரின் குறைகளை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ல வேண்டும் என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், இளமையில் குடும்பம் குழந்தை ஆகியோரை விட்டு பிரிந்தது துயரம் என குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது, இதய நோய் பாதிப்பு ஏற்பட்டால், குறைந்தது 60 நிமிடங்களில் இருந்து 90 நிமிடங்களுக்குள்ளாக மருத்துவமனைக்கு சென்றால் உயிர் பிழைக்க அதிக வாய்ப்பு இருக்கும். அதனால் உங்களுக்கு அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துமனைக்கு செல்வது மிகவும் அவசியம் என்றனர்.