ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்…100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!

Electric Jeep In Bihar: பீகாரில் ரூ. 1 லட்சம் மதிப்பில் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்லக்கூடிய மின்சார ஜீப்பை இளைஞர் ஒருவர் தயார் செய்துள்ளார். இந்த ஜீப்பில் 5 பேர் செல்லும் வகையிலும், விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையிலும் உள்ளது.

ரூ.1 லட்சத்தில் மின்சார ஜீப்...100 கி.மீட்டர் பயணம்..பீகார் இளைஞரின் புதுமை!

மாதிரி படம்

Updated On: 

07 Jan 2026 12:51 PM

 IST

பீகார் மாநிலம், பூர்னியாவை சேர்ந்தவர் முர்ஷித் ஆலம். இவர், 18 நாட்கள் மேற்கொண்ட கடின உழைப்பின் பயனாக ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 100 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய மின்சார ஜீப்பை உருவாக்கியுள்ளார். முர்ஷித் ஆலம் முன்னதாக பூர்னியாவில் ஒரு மெக்கானிக் கடையில் பணிபுரிந்து வந்தார். இதேபோல, பல்வேறு இடங்களில் அவர் பணியாற்றியுள்ளார். இதன் பின்னர், தனியாக மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கடையில் சிறப்பாக செயல்பட தொடங்கியது. இந்த நிலையில், முர்ஷித் ஆலமுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதில், 5 பேர் செல்லக்கூடிய வகையிலும், எளிதாக இருக்கும் வகையிலும் ஒரு வாகனத்தை தயாரிக்க முடிவு செய்தார். இதில், 2.0 அமைப்பை போன்ற ஒரு மின்சான ஜீப்பை உருவாக்க திட்டமிட்டார்.

100 கி.மீ வரை செல்லும் மின்சார ஜீப்

அதன்படி, மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஜீப்பை உருவாக்கினார். இதில், 5 பேர் அமர்வதற்கான இருக்கைகளுடன் தயார் செய்யப்பட்டது. இந்த மின்சாரம் ஜீப்பின் விலை ரூ. ஒரு லட்சம் ஆகும். இந்த ஜீப்பை 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இதன் மூலம், 5 பேர் அமர்ந்து சுமார் 100 கிலோ மீட்டர் சுலபமாக செல்லலாம். மேலும், விவசாயிகள் இந்த ஜீப்பை விவசாயத்துக்கும் பயன்படுத்தலாம். இந்த ஜீப்பின் பின்புறம் டிராலியை இணைக்க முடியும்.

மேலும் படிக்க: இனி KYV கட்டாயமில்லை.. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

மின்சார ஜீப்பில் உள்ள அம்சங்கள்

மேலும், விவசாயிகள் அல்லது விளைநிலங்களில் உள்ள விவசாய பயிர்களை இந்த ஜீப்பில் எளிதாக கொண்டு செல்லலாம். இந்த மின்சார ஜீப்பில் 4 சக்கரங்கள், ஒரு ஸ்பீடோ மீட்டர், ஒரு பேட்டரி சார்ஜிங் பாயிண்ட், டியூப்லெஸ் டயர்கள், பவர் ஸ்டியரிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த மின்சாரம் ஜீப்பை அனைவரும் எளிதாக இயக்கலாம். மேலும், யார் வேண்டுமானாலும் இந்த ஜீப்பை வெறும் ரூ. 1 லட்சத்துக்கு வாங்கிக் கொள்ளலாம்.

முக்கியத்துவம் பெறும் மின்சார ஜீப்

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புது புது அம்சங்களுடன் பல்வேறு வாகனங்கள் சந்தையில் விற்பனைக்காக வருகின்றன. இதில், உள்ள அம்சங்களின் அடிப்படையில் பொதுமக்கள் அதனை வாங்கி செல்கின்றனர். பெரும்பாலான மக்கள் குறைந்த விலையில் சொகுசான கார்களை வாங்குவதை ஆர்வம் காட்டுகின்றனர். இதில், முர்ஷித் ஆலம் தயார் செய்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான மின்சார ஜீப்- மும் முக்கியத்துவம் பெறுகிறது. சாதாரண மெக்கானிக் நபர் சொந்தமாக மின்சார ஜீப்பை உருவாக்கியதை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க: மின்சார வாகனம் வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்.. நெடுஞ்சாலைகளில் வருகிறது சார்ஜிங் ஸ்டேஷன்..

Related Stories
சென்னைக்கு ஷாக்.. கடலில் மூழ்கும் அபாயம் என வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.. முழு விவரம்!
2 பிள்ளைகளை கழுத்தை நெருக்கி கொலை செய்த தந்தை.. தானும் விபரீத முடிவு.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்!
திருப்பதி கோயிலில் தரிசன முன்பதிவில் புதிய மாற்றம்…நாளை முதல் அமல்….என்னனு தெரிஞ்சுக்கோங்க!
மும்பையில் ஐஎஸ்ஐ ஆதரவுடன் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை…மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு!
இந்தியாவில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு.. அரசு முக்கிய அறிவிப்பு!
சபரிமலையில் ரூ.1.60 கோடி அரவணைகள் வீண்..ரூ.16 லட்சம் நெய் பாக்கெட்டுகள் மாயம்…தொடரும் சர்ச்சை!
இந்திய சாலைகளை எப்படி கடக்க வேண்டும் என கற்றுக்கொடுக்கும் ரஷ்ய பெண் - வைரலாகும் வீடியோ
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஃபாஸ்ட் ஃபுட்டால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்
இனி KYC கட்டாயமில்லை.. நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பால் வாகன ஓட்டிகள் நிம்மதி
இந்தியாவின் மிக மெதுவாகச் செல்லும் ரயில் பயணம்.. எங்கு உள்ளது தெரியுமா?