பீகார் தேர்தல் – 17 திருத்தங்களை அறிவித்த தேர்தல் ஆணையம்

Bihar Election: பீகாரில் நவம்பர் 22, 2025க்கு முன் சட்டமன்றத் தேர்தல் செயல்முறை முடிக்கப்படும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்காக நாட்டில் முதல் முறையாக, வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் வாக்குச்சீட்டில் அச்சிடப்பட உள்ளன. ஆதார் குடியுரிமக்கான சான்றல்ல என்று தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பீகார் தேர்தல் - 17 திருத்தங்களை அறிவித்த தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

Updated On: 

05 Oct 2025 22:34 PM

 IST

பீகார் (Bihar) சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் அட்டவணை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழு பீகாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று ஜனதா தளம் கோரியுள்ளது. இருப்பினும், எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படும் என்பது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார். இந்த நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 17 சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் செய்துள்ளது அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த நிலையில் தேர்தல் செயல்முறை நவம்பர் 22, 2025 அன்றுடன்  நிறைவடையும். அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. பீகார் வாக்காளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தகுதியற்ற வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும்  படிக்க : தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் முறையில் மாற்றம் – தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு – என்ன தெரியுமா?

ஆதார் குடியுரிமைக்கான சான்று அல்ல

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இறுதிப் பட்டியலில் அரசியல் கட்சிகளுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அதை தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடியை அமைக்க முடிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் முறையாக, வேட்பாளர்களின் புகைப்படங்கள், தேர்தல் சின்னம்  மற்றும் வேட்பாளர்களின் வரிசை எண்கள் மின்னணு வாக்குச் சீட்டில்  அச்சிடப்படும். ஆதார் குடியுரிமை மற்றும் பிறப்புத் தரவுக்கான சான்றல்ல என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெளிவுபடுத்தினார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு

 

பீகார் தேர்தலுக்காக 17 சீர்திருத்தங்கள்

பீகாரில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 17 புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்துவதாக தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். இந்த நடவடிக்கைகள் மாநிலத்தில் தேர்தல் செயல்முறையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான மாதிரியாகவும் செயல்படும் என்று அவர் கூறினார். “பீகாரில் 17 புதிய திருத்தங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. சில வாக்கு எண்ணிக்கையில் செயல்படுத்தப்படும்,” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறினார்.

இதையும் படிக்க : அமைதிக்கான முயற்சியை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்.. காசாவில் போர் நிறுத்தம் உருவாகும் சூழலில் பிரதமர் மோடி பதிவு!

பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. 2025 தேர்தல்கள் நவம்பர் 22 ஆம் தேதி முடிவடையும். சட்டமன்றத் தேர்தலின் ஒரு பகுதியாக பூத் நிலை முகவர்களுக்கான பயிற்சித் திட்டங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த காலங்களில், பீகாரில் மூன்று மற்றும் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருக்கிறது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று ஜனதா தளம் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் மற்ற கட்சிகள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரின. எத்தனை கட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து விரைவில் ஒரு முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. பீகார்  470 பேரை தேர்தல் பார்வையாளர்களாக நியமித்துள்ளது.