மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தை உலுக்கிய நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!
Earthquake Strikes Manipur and Arunachal Pradesh | இந்தியாவில் மணிப்பூர் மற்றும் அருணாச்சலே பிரதேசத்தில் இன்று (அக்டோபர் 03, 2025) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளிலும் மிக குறைவான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்கு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

சென்னை, அக்டோபர் 03 : மணிப்பூர் (Manipur) மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் (Arunachal Pradesh) இன்று (அக்டோபர் 03, 2025) காலை நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் மிக குறைவான அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேச நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மணிப்பூர் நிலநடுக்கம்
மணிப்பூரின் நோனி பகுதியில் காலை 2.18 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (National Center for Seismology) தெரிவித்துள்ளது. 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 24.64 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.47 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
3.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்
EQ of M: 3.0, On: 03/10/2025 02:18:09 IST, Lat: 24.64 N, Long: 93.47 E, Depth: 5 Km, Location: Noney, Manipur.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/BxzWfG00z2— National Center for Seismology (@NCS_Earthquake) October 2, 2025
இதையும் படிங்க : பொறியியல் அதிசயம்.. லடாக்கில் 19,000 அடி உயரத்தில் மிக உயரமான சாலை.. BROவின் சாதனை!
அருணாச்சல பிரதேச நிலநடுக்கம்
அருணாச்சல பிரதேசத்தின் பிச்சோம் பகுதியில் காலை 7.41 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேசிய நிலநடுக்கவியம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 27.34 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.51 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
EQ of M: 3.2, On: 03/10/2025 07:47:57 IST, Lat: 27.34 N, Long: 92.51 E, Depth: 10 Km, Location: Bichom, Arunachal Pradesh.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/jKXSPB9zG8— National Center for Seismology (@NCS_Earthquake) October 3, 2025
இதையும் படிங்க : ஆறு பேரை வீட்டில் வைத்து தீ வைத்து கொளுத்திய விவசாயி.. மூட நம்பிக்கையின் உச்சத்தில் நடைபெற்ற சம்பவம்?
இந்த இரண்டு பகுதிகளிலும் மிக குறைவான அளவே நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்ட நிலையில் அங்கு பெரிய பாதுப்புகள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.