வேட்பாளர்களின் கலர் போட்டோ.. வாக்கு எந்திரத்தில் பெரிய மாற்றம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Election Commission : இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதில் குறிப்பாக, வாக்களிப்பதில் மேலும் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் விதமாக வண்ணப் புகைப்படங்களுடன் வேட்பாளர்கள் போட்டோ இடம்பெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்கு எந்திரம்
டெல்லி, செப்டம்பர் 18 : இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, வரும் தேர்தல்களில் வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, கருப்பு வெள்ளை புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்க வேட்பாளர்களின் புகைப்படங்கள் தெளிவாகவும், வண்ணப் புகைப்படங்களுடன் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப, வாக்கு எந்திரத்தையும் மேம்படுத்தி வருகிறது.
வாக்கு எந்திரத்தில் பெரிய மாற்றம்
இதற்கிடையில், பீகார் மாநிலத்தில் அக்டோபர், நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் போலி வாக்காளர்கள், இறந்தவர்களின் பெயர்கள் உள்ளிட்டவற்றை நீக்குவதற்கான சிறப்பு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 65 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு இந்தியா கூட்டணியும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வாக்கு திருட்டு நடைபெற்றதாகவும் ராகுல் காந்தி பகீரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இப்படியான சூழலில், பீகார் சட்டப்பேரவை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Also Read : கேரளாவை மிரட்டும் மூளையை தின்னும் அமீபா தொற்று.. இதுவரை 19 பேர் பலி.. தடுப்பது எப்படி?
வேட்பாளர்களின் கலர் போட்டோ
அதாவது, இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, வரும் தேர்தல்களில் வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள், 1961 இன் விதி 49B இன் கீழ், தேர்தல் ஆணையம் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது.
திருத்தத்தைத் தொடர்ந்து, வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் வாக்கு எந்திரத்தில் இடம்பெற்றிருக்கும். புகைப்படத்தின் மொத்த அளவில் 4-ல் 3 பங்கு அளவுக்கு முகம் தெளிவாக காட்டப்படும். மேலும், வேட்பாளர்களின் வரிசை எண் மற்றும் வேட்பாளர்களின் பெயர், நோட்டா ஆகியவை ஒரே வகை எழுத்தில் எளிதாக படிக்கும் வகையில், பெரிய எழுத்துகளின் அளவு 30 ஆக இருக்கும்.
Also Read : இது என்ன புதுசா இருக்கு? மனிதர்களை கடிக்கும் தெரு நாய்க்கு ஆயுள் தண்டனை.. வினோத உத்தரவு
வேட்பாளர் பட்டியலி அச்சிட 70 ஜிஎஸ்எம் தடிமன் கொண்ட இளஞ்சிவப்பு நிறத்தாள் பயன்படுத்தப்பட உள்ளது. இது வாக்களிப்பதில் மேலும் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் விதமாக தேர்தல் ஆணையம் கொண்டு வருகிறது. இந்த புதிய திட்டம் பீகார் மாநில தேர்தலில் முதல்முறையாக கொண்டு வரப்பட்டு, வரும் தேர்தல்களில் அனைத்தும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.