தொடர் கனமழையால் தத்தளிக்கும் மும்பை.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

Mumbai Heavy Rain | மகாராஷ்டிரா மாநிலத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழையால் தத்தளிக்கும் மும்பை.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

மும்பை கனமழை

Published: 

20 Aug 2025 08:28 AM

மும்பை, ஆகஸ்ட் 20 : மும்பையில் (Mumbai) கடந்த சில நாட்களாக கனமழை (Heavy Rain) பெய்து வரும் நிலையில், அங்கு மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பையின் பலவேறு பகுதிகள் மழை நீரில் மூழ்கி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இன்று (ஆகஸ்ட் 20, 2025) கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையின் தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில், இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையின் முக்கியமான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, ரயில் மற்றும் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மும்பையில் 4வது நாளாக கனமழை – ரயில், விமான சேவைகள் பாதிப்பு

தொடர் கனமழையால் தவிக்கும் மும்பை

பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பொதுமக்கள்

மும்பையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அங்கு விபத்து சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், குர்லாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பகுதியில் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளதால் அந்த சாலை மூடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒருசில மணி நேரங்களிலேயே கொட்டித் தீர்ப்பதுதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அங்கு தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு.. புதைந்த வீடுகள்.. 4 பேர் உயிரிழப்பு

மும்பையில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 20, 2025) அங்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு மழையின் தீவிரம் சற்று குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.