Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த சந்திராயன் – 2 புகைப்படங்கள்.. விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

Chandrayaan 2 Sends Photos of Water in Moon | சந்திராயன் - 2 விண்கலம் நிலவில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தண்ணீரில் நீர் இருப்பதை உறுதி செய்யும் விதமாக புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளது.

நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த சந்திராயன் – 2 புகைப்படங்கள்.. விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
நிலவு
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Nov 2025 08:03 AM IST

புதுடெல்லி, நவம்பர் 10 : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO – Indian Space Research Organization) நிலவு குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன் – 2 (Chandrayaan – 2) விண்கலத்தை அனுப்பி வைத்தது. இந்த சந்திராயன் – 2 விண்கலம் ஆர்பிட்டர் நிலைவை சுற்றி வந்துக்கொண்டு இருக்கிறது. அதாவது, அந்த ஆர்பிட்டர் நிலவில் நீர் உள்ளதா என்பதை தான் தற்போது இந்த சந்திராயன் – 2 விண்கலம் ஆய்வு செய்து வருகிறது.

நிலவில் நீர் இருப்பதற்கான புகைப்படத்தை அனுப்பிய சந்திராயன் – 2

சந்திராயன் – 2 விண்கலம் நிலவில் நீர் உள்ளதா என்பதை சோதனை செய்து வந்த நிலையில், நிலவில் உள்ள நீர் பனிக்கட்டி மற்றும் மண்ணின் ரேடார் படங்களை தற்போது சந்திராயன் – 2 ஆர்பிட்டர் அனுப்பி உள்ளது. அந்த தகவலின்படி நிலவில் நீர் இருப்பது உறுதியாகியுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு நிலவில் நீர் இருக்கும் இடம் குறித்த வரைபடத்தை இஸ்ரோ தயாரித்து வருகிறது. அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் இந்த வரைபடத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : அந்தமான் நிகோபார் தீவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. 5.4 ரிக்டராக பதிவு!

நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த சந்திராயன் – 2 புகைப்படங்கள்

சந்திராயன் – 2 விண்கலம் அனுப்பி வைத்துள்ள புகைப்படங்களை வைத்து இரட்டை அதிர் வெண் செயற்கை துளை ரேடார் என்ற உயர் தொழில்நுட்ப அம்சத்தை பயன்படுத்தி அதற்கான வரைபடத்தை தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வு தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1,40,000 ரேடார் தரவு தொகுப்புகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : இந்தியா முழுவதும் தாக்குதல் திட்டம் – 3 பேரை கைது செய்த குஜராத் போலீஸ் – பரபரப்பு தகவல்

இது குறித்து கூறியுள்ள இஸ்ரோ, நிலவின் தென், வட துருவ பகுதிகளில் முழுமையான பண்புகளை அறிய இந்த தரவுகள் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளது. மேலும், வரும் காலங்களில் நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்தியா அளிக்கும் பெரிய பங்களிப்பாக இது இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.