சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 88.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!
CBSE 12th Exam Result : நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 88.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2024 ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.98 சதவீதம் இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு 0.41 சதவீதம் அதிமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டெல்லி, மே 13 : நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் (CBSE 12th Result 2025) ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 88.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வை 16,92,794 மாணவர்கள் எழுதியிருந்தனர். இதில் 14,96,307 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கமான மாணவர்களை விட மாணவிகளை அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.64 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த 2024 ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.98 சதவீதம் இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு 0.41 சதவீதம் அதிமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரத்தில் மாணவர்கள் 85.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2025 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 99.60 சதவீத தேர்ச்சியுடன் விஜயவாடா முதலிடத்தை பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் 99.32 சதவீத மாணவர்களும், சென்னையில் 97.39 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 79.53 சதவீத தேர்ச்சியுடன் பிரயாக்ராஜ் கடைசி இடத்தை பிடித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரை, டெல்லி மேற்கில் 95.35 சதவீத தேர்ச்சியும், டெல்லி கிழக்கு 95.07 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. பெங்களூருவில் 95.97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ரிசல்ட் பார்ப்பது எப்படி?
Central Board of Secondary Education (CBSE) declares Class XII results.
CBSE Class 12 results: 88.39% of students pass the board exams. Passing percentage increased by 0.41% since last year.
Girls outshine boys by over 5.94% points; over 91% girls passed the exam. pic.twitter.com/LjDqMa4iw8
— ANI (@ANI) May 13, 2025
https://www.cbse.gov.in/, https://results.cbse.nic.in/ என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். உங்கள் ரோல் நம்பர், school number, admit card id, date of birth, security pin மற்றும் பிற விவரங்களை உள்ளீட்டு முடிவுகளை தெரிந்த கொள்ளுங்கள். மேலும், டிஜிலாக்கர் செயலி மூலமும் உங்கள் ரிசல்ட்டை பார்த்து கொள்ளலாம். மேலும், உங்கள் மொபைல் போனில் மெசேஜ் மூலமும் ரிசல்ட்டை பார்க்கலாம். 7738399899 என்ற எண்ணுக்கு மேலோ குறிப்பிடப்பட்ட விவரங்களை அனுப்பி உங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.