Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இரண்டு மகள்களுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட தொழிலதிபர்.. அதிர்ச்சி சம்பவம்!

Businessman Killed Himself and His Daughters | குஜராத்தை சேர்ந்த தீரஜ் ரபாரி என்ற தொழிலதிபர் தனது இரண்டு மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு மகள்களுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட தொழிலதிபர்.. அதிர்ச்சி சம்பவம்!
உயிரிழந்தவர்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Nov 2025 20:53 PM IST

காந்தி நகர், நவம்பர் 09 : குஜராத் (Gujarat) மாநிலம், காந்தி நகர் மாவட்டம் போரிசனா கிராமத்தை சேந்தவர் தீரஜ் ரபாரி. தொழிலதிபரான இவருக்கு ஜான்வி மற்றும் ஜியா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் அவர் நேற்று (நவம்பர் 08, 2025) தனது இரண்டு மகள்களையும் காரில் அழைத்துக்கொண்டு ஆதார் கார்டு எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

மகள்களுடன் தற்கொலை செய்துக்கொண்ட தீரஜ் ரபாரி

தீரஜின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன தீரஜ் மற்றும் அவரது இரண்டு மகள்களை தேடி வந்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தீரஜ் தனது நண்பர் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துவிட்டு தனது இரண்டு மகள்களுடனும் நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : பழைய பொருட்களை விற்று ரூ.800 கோடி சம்பாதித்த மத்திய அரசு – சந்திராயன் -3 செலவை விட அதிகம்

3 பேரின் உடல்களை மீட்டு எடுத்த போலீசார்

தீரஜின் நண்பர் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் இணைந்து நர்மதா கால்வாயில் இறங்கி தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீரஜ் மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்களையும் கால்வாயில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர். பிறகு மூன்று பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : செம்மரத்தை வெட்டினால் தோலை உரிப்போம்… தமிழர்களுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் – பவன் கல்யாண் எச்சரிக்கை

தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்

தொழிலதிபர் தனது இரண்டு மகள்களுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீரஜ் தனது இரண்டு மகள்களுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.