PM Modi Road Show | பீகாரில் பிரமாண்ட ‘ரோடு ஷோ’ சென்ற பிரதமர் மோடி: பரபரக்கும் தேர்தல் களம்!
Bihar elections: பீகார் மக்கள் நல்லாட்சி அளிக்கும் அரசை மீண்டும் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை தனது உள்ளதாக பிரதமர் மோடி பெருமையுடன் கூறியுள்ளார். இத்தனை நாள் பீகார் பக்கம் செல்லாத ராகுல் காந்தி சமீபத்தில் தான் அங்கு பிரசாரத்தை தொடங்கி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
பீகார், நவம்பர் 02: பீகாரில் இன்னும் நான்கு நாட்களில் முதல்கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அங்கு பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். இதையொட்டி, வழிநெடுக சாலையின் இருபுறமும் குவிந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவர் மேற்கொண்ட 3ஆவது ரோடுஷோ இதுவாகும். இன்று ஒரேநாளில் காலை, மாலை என பிரதமர் மோடி அங்கு இரண்டு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அதேசமயம், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், தேர்தல் களம் பரபரக்க தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க : இந்தியாவின் ‘பாகுபலி’.. இன்று விண்ணில் பாயும் எல்.வி.எம் – எம்5 ராக்கெட்.. சிறப்பம்சம் என்ன?
பீகாரில் 2 கட்டமாக தேர்தல்:
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவில், 121 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கும் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று இருக்கிறது.
ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம், நிதிஷ்குமாரிடம் இருந்து இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதாவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) – காங்கிரஸின் மகா பந்தன் கூட்டணி உள்ளது.
கண்கவர் வாக்குறுதிகள்:
அந்தவகையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் கண்கவர் அறிவிப்புகள் கொண்ட தேர்தல் வாக்குறுதிகளை சமீபத்தில் வெளியிட்டனர். அதில், அரசு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு உதவித்தொகை என இரு பெரும் கட்சிகளுக்கும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளன. அந்தவகையில், இன்று காலை பிரதமர் மோடி போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.
அதில், ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள் வழங்கப்படும், தொழில் தொடங்கும் 75 லட்சம் மகளிருக்கு ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.3,000 உதவித்தொகை என்பதை குறிப்பிட்டு பேசினார். அதோடு, அவர் காங்கிரஸ், ஆர்ஜேடி பீகாரின் அடையாளத்தை அழிக்க விரும்புவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையும் படிக்க : இந்த வகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை.. டெல்லி அரசு எடுத்த முடிவு!
தொடர்ந்து, மாலையில் பாட்னாவில், திறந்தவெளி வாகனத்தில் தாமரை சின்னத்தை காட்டியவாறு, மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வலியுறுத்தி பேரணி சென்றார். இதேபோல், ராகுல் காந்தியும் இந்தியா கூட்டணியை ஆதரித்து இன்று அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.



