21 வயது மாடல் அழகி மர்ம மரணம்.. மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தப்பி ஓடிய காதலன்!

21 Years Model Died in Bhopal | மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த மாடல் அழகி திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

21 வயது மாடல் அழகி மர்ம மரணம்.. மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தப்பி ஓடிய காதலன்!

உயிரிழந்த இளம் பெண்

Updated On: 

11 Nov 2025 07:35 AM

 IST

போபால், நவம்பர் 11 : மத்திய பிரதேச (MP – Madhya Pradesh) மாநிலம் போபாலை (Bhopal) சேர்ந்தவர் 21 வயது இளம் பெண் குஷ்பு அஹ்வார். மாடல் அழகியான இவர் இணையத்தில் மிகவும் பிரபலமான நபராக வளம் வந்தார். இந்த நிலையில், குஷ்புவுக்கு நேற்று (நவம்பர் 10, 2025) திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது காதலன் குசாம், அவரை போபாலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதித்த பிறகு அவரது காதலன் அங்கிருந்து ஓடிவிட்டார்.

ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்த மருத்துவர்கள்

இந்த நிலையில், மாடல் அழகியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அவரது காதலன் மாயமான நிலையில், சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. தகவலின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : கர்ப்பமாக்கிய காதலன்.. திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தற்கொலை!

காதலனை கைது செய்து விசாரணை

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற குஷ்புவின் காதலனை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மாடல் அழகியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைகப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் இந்த விவகாரம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : பேய் பிடித்துள்ளதாக கூறி கொடுமை.. இளம் பெண்ணை மது குடிக்க வைத்து கொடுமை செய்த சாமியார்!

தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை

தற்போதைய நிலையில், அந்த பெண்ணின் காதலன் அங்கிருந்து தப்பி ஓடியதால் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை விசாரணை வளையத்திற்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர். அவரிடம் இது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 21 வயதே ஆன மாடல் அழகி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அவரை பின்தொடரும் நபர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories
சயனைடை விட 6,000 மடங்கு ஆபத்தான் ரைசின்.. பயங்கரவாதிகள் தீட்டிய சதி திட்டத்தை முறியடித்த ஏடிஎஸ்!
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்.. பயங்கரவாதி உமரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பீகாரில் தொடங்கியது 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.. 7.6 லட்சம் இளம் வாக்காளர்கள்.. புதிய சாதனை படைக்க பிரதமர் வலியுறுத்தல்
Delhi Blast: டெல்லியில் நடந்தது தற்கொலை படை தாக்குதலா? புல்வாமா வரை சென்ற விசாரணை.. கைதான கார் உரிமையாளர் சொன்ன திடுக் தகவல்..
Delhi Blast: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிகுண்டு விபத்து.. இன்று ஒரு நாள் சாந்தினி சௌக் சந்தை மூடப்படும் என அறிவிப்பு..
Delhi Blast: நாட்டையே உலுக்கிய டெல்லி வெடிகுண்டு விபத்து.. இதுவரை இல்லாத புதிய முறை.. காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் தகவல்..