Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சதி செயல்களை திட்டமிட்ட 3 பயங்கரவாதிகள்.. தட்டித்தூக்கிய குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு..

Gujarat ATS Arrested 3 Terrorist: பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடவும், ஆயுதங்களை வழங்கவும் சதி செய்ததாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்களை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் கண்காணிப்பில் இருந்ததாகவும் நாடு முழுவதும் பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சதி செயல்களை திட்டமிட்ட 3 பயங்கரவாதிகள்.. தட்டித்தூக்கிய குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு..
கைதான பயங்கரவாதிகள்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Nov 2025 20:58 PM IST

அகமதாபாத், நவம்பர் 9, 2025: நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிடவும், ஆயுதங்களை வழங்கவும் சதி செய்ததாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்களை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) கைது செய்துள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, டாக்டர் அகமது மொய்தீன், முகமது சுகில் மற்றும் ஆசாத் ஆகிய மூவரும் கடந்த ஒரு வருடமாக ஏடிஎஸ் கண்காணிப்பில் இருந்துள்ளனர். மூன்று சந்தேக நபர்களும் ஆயுதங்களை வழங்கும் போது கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களை திட்டமிட்டிருந்ததாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள்:


இந்த ஆண்டின் தொடக்கத்தில் குஜராத் ஏடிஎஸ், இந்திய துணைக்கண்டத்தில் அல்-கொய்தா (Al-Qaeda in the Indian Subcontinent – AQIS) அமைப்புடன் தொடர்புடைய ஐந்து உறுப்பினர்களை கைது செய்தது. இதில், பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஆன்லைன் பயங்கரவாத தொகுதியை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அல்-கொய்தாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் பெங்களூருவைச் சேர்ந்த 30 வயதான சாமா பர்வீனை ஏடிஎஸ் கைது செய்தது. மேலும், 2025 ஜூலை 23 அன்று முகமது ஃபைக், முகமது ஃபர்தீன், ஷெப்புல்லா குரேஷி மற்றும் ஜீஷன் அலி என அடையாளம் காணப்பட்ட நான்கு AQIS தொடர்புடைய செயல்பாட்டாளர்களை ஏஜென்சி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

கண்காணிப்பில் இருந்த நபர்கள்:


குஜராத் ஏடிஎஸ் டிஐஜி சுனில் ஜோஷி, “அனைத்து சந்தேக நபர்களும் AQIS உடனான தொடர்புகளுக்காக கண்காணிப்பில் இருந்தனர். குறிப்பிட்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்” என தெரிவித்தார்.