ஓலா-உபர், ராபிடோக்கு இணையாக…நாடு முழுவதும் களமிறங்கும் பாரத் டாக்ஸி…பல்வேறு முக்கிய வசதிகள்!

When Will Bharat Taxi Service Start: ராபிடோ, ஓலா, உபர் ஆகியற்றுக்கு இணையாக பாரத் டாக்ஸி சேவை நாடு முழுவதும் தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் பயணிகளுக்கும், ஓட்டுநர்களுக்கும் பல்வேறு வசதிகள் உள்ளன. இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

ஓலா-உபர், ராபிடோக்கு இணையாக...நாடு முழுவதும் களமிறங்கும் பாரத் டாக்ஸி...பல்வேறு முக்கிய வசதிகள்!

நாடு முழுவதும் பாரத் டாக்ஸி சேவை

Published: 

30 Dec 2025 11:33 AM

 IST

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓலா, உபர், ராபிடோ ஆகிய தனியாருக்கு சொந்தமான ஒரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செயலிகள் மூலமாக வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இதே போல, சவாரி ஹெய்லிங் மொபிலிட்டி செயலியான பாரத் டாக்ஸி சேவை வரும் ஜனவரி 1- ஆம் தேதி (வியாழக்கிழமை) அறிமுகம் செய்யப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த செயலி இருப்பதை உறுதி செய்திருந்தார். இந்த செயலியை சாஹாகர் டாக்ஸி கூட்டுறவு லிமிடெட் இயக்கி வருகிறது. இதில், NCDC, IFFCO, AMUL, KRIBHCO, NAFED, NABARD, NDDB, NCEL உள்ளிட்ட 8 நிறுவனங்கள் கூட்டாக செயல்படுத்தி வருகின்றன.

பாரத் டாக்ஸி சேவையில் 51 ஆயிரம் ஓட்டுநர்கள் பதிவு

தற்போது, இந்த செயலியில் புதுடெல்லி மற்றும் குஜராத் மாநிலம், சௌராஷ்டிரா முழுவதும் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இந்த செயலியின் மூலம் தினம்தோறும் ஓட்டுநர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற செயலிகளில் 20 முதல் 30 சதவீத கமிஷன் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பாரத் டாக்ஸி செயலி எந்த கமிஷனையும் வசூலிப்பதில்லை. இதனால், ஓட்டுநர்கள் கட்டணத்தில் 100 சதவீதம் பெற முடியும்.

மேலும் படிக்க: 2025ன் கடைசி ‘மன் கி பாத்’.. ஆபரேஷன் சிந்தூரை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி பெருமிதம்!

ஓட்டுநர்களுக்கு பல்வேறு சலுகைகள்

வாரிய பிரதிநிதித்துவம், வருடாந்திர ஈவுத்தொகை மற்றும் கூட்டுறவு நிறுவனத்தின் லாபத்தில் பங்கு போன்ற பிற சலுகைகளை பெறுவதற்கு ஓட்டுனர்களுக்கு உரிமை உள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதே போல, ஓட்டுநர்கள் பாரத் டாக்ஸி டிரைவர் செயலியை அந்தந்த தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில், மற்ற செயலிகளை போல இரு சக்கர வாகனங்கள், ரிக் ஷாக்கள், டாக்ஸிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களின் சேவைகள் உள்ளன.

பயணிகளுக்கான பல்வேறு வசதிகள்-அம்சங்கள்

இந்த செயலியானது ஜனவரி 1- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த செயலியானது மற்ற செயலியை போல அல்லாமல் எந்த விதமான திடீர் விலை நிர்ணயமும் இன்றி வெளிப்படையான கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். மேலும், இருப்பிட கண்காணிப்பு, ஓட்டுநர் சரிபார்ப்பு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணம் மற்றும் இருப்பிடத்தை பகிர்ந்து கொள்ளும் வசதி, 24 மணி நேரமும் செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையம், ஓட்டுநர்களுக்கான காப்பீட்டுத் தொகை உள்ளிட்டவை உள்ளன.

மேலும் படிக்க: வளமான கடல்சார் பாரம்பரியத்தை பிரதிபளிக்கும் INSV கவுண்டின்யா – பிரதமர் மோடி பெருமிதம்..

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு