ரோட்டில் வைத்து தர்ம அடி! 3 பேரை கொடூரமாக தாக்கிய போலீஸ்.. வீடியோ வைரலானதால் சஸ்பெண்ட்!
Andhra Police Beating 3 Men: ஆந்திர பிரதேசம், குண்டூர் மாவட்டம், தெனாலியில் போலீசார் மூன்று பேரை கொடூரமாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தாக்கப்பட்டவர்கள் முன்னர் ஒரு போலீஸ்காரரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், போலீசாரின் நடவடிக்கை மனித உரிமை மீறலாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா, மே 27: ஆந்திர பிரதேசத்தில் (Andhra Pradesh) குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி நெடுஞ்சாலையில் காவல்துறையினர் சாலையோரத்தில் 3 பேரை கொடூரமாக தாக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை அளித்தது. சமூல வலைதளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து, ஒரு காவல்துறை அதிகாரி இடைநீக்கம் (Police Suspend) செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது, கடந்த ஒரு மாதத்திற்கு ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேரை தெனாலி நகர போலீசார் கைது செய்தனர். அப்போதுதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
யார் அவர்கள்..?
வைரலான வீடியோவில் போலீஸாரின் தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் விக்டர், பாபுலால் மற்றும் ராகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் நெடுஞ்சாலையில் கால்களை நீட்டியப்படி அமர்ந்திருப்பதையும், அதேநேரத்தில் சீருடை அணிந்த ஒரு போலீஸ்காரர் அவர்களின் கால்களில் மீண்டும் மீண்டும் லத்திய கொண்டு தாக்குதல் நடத்தியதையும் காணலாம். மற்றொரு அதிகாரி தாக்குதலின்போது அவர்கள் நிலையாக இருப்பதை உறுதி செய்வதற்காக, தனது ஷூவை கொண்டு ஒருவரின் கால்களை இறுக்கி பிடித்துள்ளார்.
கிடைத்த தகவல்களின்படி, 3 பேரும் போதைப்பொருள் பயன்படுத்தி போதையில் இருந்ததாகவும், முன்பு ஒரு முறை கான்ஸ்டபிளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் காவல்துறை அதிகாரிகள் இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றுவதற்கு பதிலாக, காவல்துறை அதிகாரிகள் ஐதநகர் பகுதிக்கு அழைத்து சென்று உடல் ரீதியான தண்டனைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இதையடுத்து, தாக்குதல் நடத்திய அதிகாரியை இடைநீக்கம் செய்ய காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
வீடியோ வைரல்:
ఈ దృశ్యం తెనాలి నడిరోడ్డు పై…
తప్పు చేసినా కొట్టే హక్కు వీరికి లేదు
పౌరహక్కులు లేని “బాబు పాలన “ఇది!
కదలండి…….న్యాయ పోరాటానికి!@ncbn @naralokesh @Anitha_TDP @APPOLICE100 pic.twitter.com/uiS5Nvzwx7— Ambati Rambabu (@AmbatiRambabu) May 26, 2025
இதுதொடர்பான வீடியோவை YSR காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அம்பதி ராம்பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து. நீங்கள் ஏதாவது தவறு செய்தாலும் உங்களை அடிக்க அவர்களுக்கு உரிமை இல்லை. இது சிவில் உரிமைகள் இல்லாத ‘பாபுவின் ஆட்சி’!” என பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து தெனாலி டூ டவுன் காவல்துறை அதிகாரி ராமுலு நாயக் கூறுகையில், ”இந்த சம்பவம் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது, குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரும் சேர்ந்து, கஞ்சா போதையில் கான்ஸ்டபிள் கண்ணா சிரஞ்சீவியைத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு கான்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.” என்று தெரிவித்தார்.