தமிழ்நாடுதான் டாப்.. 4 மாநிலங்களில் மட்டும் 95 லட்சம் பேர் நீக்கம்.. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு விவரம்!
95 Lakhs Voters Removed From Voters List | இந்திய தேர்தல் ஆணையம் 2025, நவம்பர் மாதம் தனது வக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தொடங்கிய நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், 4 மாநிலங்களில் மட்டும் சுமார் 95 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாதிரி புகைப்படம்
டெல்லி, டிசம்பர் 24 : இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஷ்கர், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உள்ளிட்ட 9 மாநிலங்களிலும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவ ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களிலும் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission Of India) வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR – Special Intensive Revision) மேற்கொண்டது. இந்த பணியின் மூலம் தகுதியற்ற வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நடைபெற்ற திருத்த பணிகளில் 4 மாநிலங்களில் மட்டும் மொத்தம் 95 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே மாதத்தில் முடிக்கப்பட்ட திருத்த பணிகள்
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை ஒரே மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதன் காரணமாக மிகவும் விறுவிறுப்பாக இந்த பணிகள் நடைபெற்றன. குறிப்பாக நவம்பர் 04, 2025 அன்று தொடங்கிய பணிகள், டிசம்பர் 22, 2025 அன்றுடன் முடிவடைந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மிக விரைவாக எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு திருத்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிலையில், திருத்த பணிகளில் எந்த எந்த மாநிலங்களில் எவ்வளவு பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க : YEAR ENDER 2025: கிராமப்புற மேம்பாட்டுக்கு படிக்கல்லான ஜல் ஜீவன் திட்டம்!
4 மாநிலங்களில் 95 பேர் லட்சம் பேர் நீக்கம்
எஸ்ஐஆர் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 95 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 3.10 லட்சம் வாக்காளர்களில் 64,000 வாக்களர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறவில்லை.
இதையும் படிங்க : உத்தரகாண்டில் இனி அனைத்து அரசு பள்ளிகளில் பகவத் கீதா கட்டாயம்.. அரசு உத்தரவு!
இதேபோல கேரளாவில் உள்ள மொத்த 2.78 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில் சுமார் 24.08 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரின் மொத்த 2.12 கோடி வாக்காளர்களில் 27.34 லட்சம் வாக்காளர்களும், மத்திய பிரதேசத்தில் உள்ள 5.74 கோடி வாக்காளர்களில் 42.75 லட்சம் வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் விவரம்
இந்தியாவில் உள்ள 9 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிக அளவு வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்தது. இந்த நிலையில், பட்டியலில் இருந்து சுமார் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடியாக உள்ளது.