ரீல்ஸ் மோகம்.. ரயில் மோதி பலியான இரண்டு சிறுவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

2 Boys Died While Shooting Reels | இளைஞர்கள் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பது தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இரண்டு சிறுவர்கள் ரயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் செய்தபோது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரீல்ஸ் மோகம்.. ரயில் மோதி பலியான இரண்டு சிறுவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Oct 2025 08:14 AM

 IST

ஜல்காவ், அக்டோபர் 28 : மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் பத்ராட் தாலுகாவை சேர்ந்தவர் ஹர்ஷல் நன்னாவரே என்ற 17 வயது சிறுவன். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் கைர்நார் என்ற 17 வயது நண்பர் ஒருவர் உள்ளார். இவர்கள் இரண்டு பேரும் அக்டோபர் 26, 2025 அன்று காலை 10 மணி அளவில் அவர்களது வீட்டிற்கு அருகே உள்ள பார்தி ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள் காதில் ஹெட்போன்ஸ் மாட்டிக்கொண்டு தண்டவாளத்தின் மீது நின்று ரீல்ஸ் செய்துக்கொண்டு இருந்துள்ளனர்.

ரீல்ஸ் மோகம் – ரயில் மோதி பலியான இரண்டு சிறுவர்கள்

அடிக்கடி ரயில் வந்து செல்லும் தண்டவாளத்தில் அந்த  சிறுவர்கள் எந்த வித கவலையும் இன்றி ரீல்ஸ் எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், அந்த வழியாக ஆமதாபாத், அவுரா விரைவு ரயில் வேகமாக வந்துக்கொண்டு இருந்துள்ளது. ரயில் பார்த்தி ரயில் நிலைய பகுதிக்கு அருகே வந்ததும் சிறுவர்கள் தண்டவாளத்தில் நின்றுக்கொண்டு இருப்பதை கண்ட ஓட்டுநர் ஹாரன் அடித்துள்ளார். ஆனால், அந்த சிறுவர்கள் இருவரும் தங்களது காதில் ஹெட்போன் அணிந்திருந்த நிலையில், அவர்களுக்கு காது கேட்காமல் இருந்துள்ளது.

இதையும் படிங்க : சாலையில் சென்ற காரில் இருந்து சிறுநீர் கழித்த நபர்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை!

காதில் ஹெட்போன் அணிந்திருந்ததால் பரிதாபமாக பலியான உயிர்கள்

ரயில் தங்களை நெருங்கி வருவதையும், ரயில் ஓட்டுநர் ஹாரன் அடிப்பதையும் உணராமல் சிறுவர்கள் தண்டவாளத்தின் மீது நின்றுக்கொண்டு இருந்த நிலையில்,  அந்த ரயில் சிறுவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளனர். அதனை கண்ட பொதுமக்கள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார், சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க : Earthquake : மும்பையை உலுக்கிய திடீர் நிலநடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!

ஆனால் அங்கு சிறுவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயுடன் கோயிலுக்கு சென்ற 9 வயது சிறுவன் ரயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுத்தபோது ரயில் மோதி பலியான வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது இரண்டு சிறுவர்கள் ரீல்ஸ் மோகத்தால் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Related Stories
ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் – 3 வாரங்களில் மாறிய இந்தியர்களின் மனநிலை – ஆச்சரியமளிக்கும் கருத்து கணிப்பு முடிவுகள்
நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்? முதல்வருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
மூன்றாவது குழந்தையை கருக்கலைப்பு செய்யாததால் ஆத்திரம்.. மனைவி மற்றும் மகள்களை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த நபர்!
6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை.. 2026 முதல் அமல்.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!!
வடமேற்கு இந்தியாவில் வானிலை மாற்றம்.. மேற்கு காற்றழுத்த அலை தாக்கத்தால் கனமழை எச்சரிக்கை
குடும்ப தகராறு.. உபியில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்!
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்