பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர்.. கோடாரியால் வெட்டி கொலை செய்த இளம் பெண்!

18 Years Old Woman Killed 50 Years Old Man | உத்தர பிரதேசத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை இளம் பெண் ஒருவர் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர்.. கோடாரியால் வெட்டி கொலை செய்த இளம் பெண்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

02 Jan 2026 15:03 PM

 IST

பண்டா, ஜனவரி 02 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், பண்டா மாவட்டத்தில் 50 வயது நபர் ஒருவரை இளம் பெண் ஒருவர் வெட்டி கொலை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அந்த 18 வயது இளம் பெண்ணை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இளம் பெண்ணை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸ்

இளம் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அந்த பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது அந்த இளம் பெண் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார். அதாவது, ஜனவரி 01, 2026 அன்று அந்த இளம் பெண் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இளம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த அந்த 50 வயது நபர், தனியாக இருந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதையும் படிங்க : ஐ.என்.எஸ்.வி. கவுண்டின்யாவின் முதல் பயணம்.. புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர்

அந்த நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதால் அந்த இளம் பெண் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், எப்படியாவது அந்த நபரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அந்த பெண் நினைத்துள்ளார். அதன்படி, தனது வீட்டில் இருந்த பர்சா என்ற வகை கோடாரியை கொண்டு அந்த நபரை இளம் பெண் மிக கடுமையாக தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க : மும்பையில் பின்நோக்கி இயங்கிய பேருந்து மோதி 4 பேர் பலி.. 9 பேர் படுகாயம்

இளம் பெண் கோடாரியால் கடுமையாக தாக்கிய நிலையில், பலத்த காயம்டைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் தகவல் அளித்த நிலையில், அங்கு சென்ற போலீசார் இறந்த நபரின் உடலை கைப்பற்றிய பின்னர் இளம் பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி