பின்னோக்கி நடக்கும் பயிற்சி பற்றி தெரியுமா? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
Wellness Guide : நடைபயிற்சி என்பது உடலுக்கு பல நன்மைகளை வழங்கக் கூடியது. இதனால் தான் மருத்துவர்கள் குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். இந்த நிலையில் பின்னோக்கி நடக்கும் முறை தற்போது பிரபலமாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
தினமும் நடப்பது (Walking) நம் உடல் ஆரோக்கியற்கு பெரிதும் உதவும் என்பது அனைவருக்கும் தெரியும். உடல் எடை குறைப்பது முதல் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாடுடன் வைத்திருப்பது வரை பல நன்மைகள் இருக்கிறது. ஆனால் அதனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கடைபிடிக்கிறார்கள். சிலர் தினமும் 10, 000 அடிகள் நடக்க வேண்டும் என்கிறார்கள். வேறு சிலரோ தினமும் ஒரு மணி நேரம் நடந்தால் தான் முழு பலன் கிடைக்கும் என்கிறார்கள். அந்த வகையில் பின்னோக்கி நடக்கும் முறையும் பிரபலமாக இருக்கிறது. பூங்காக்களில் இது போல பின்னோக்கி நடப்பவர்கள் குறித்து பார்த்திருப்போம். அதாவது நேராக நடப்பது போல கால்களை பின்னோக்கி எடுத்து திரும்பி பார்க்காமல் நடக்க வேண்டும். ஆரம்பத்தில் இது கடினமானதாக இருக்கும். ஆனால் நீண்ட காலத்தில் இதனால் பல நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது உடலுக்கு எவ்வாறு நன்மை பயக்கும்?
ஹெல்த்லைனில் வெளியான கட்டுரையின் படி, பின்னோக்கி நடப்பது குறைவாகப் பயன்படுத்தப்படும் கால் தசைகளில் வலிமையை அதிகரிக்கிறது, நடைபயிற்சி நுட்பத்தையும் முறையையும் மேம்படுத்துகிறது, உடல் சமநிலையை பராமரிக்க உதவுகிறது, கலோரிகளை வேகமாக எரிக்கிறது மற்றும் எடையை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இது தவிர, பின்னோக்கி நடப்பது எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது. ஆற்றல் நிலை மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
இதையும் படிக்க : கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்கி பாருங்க.. முதுகுவலி இனி இருக்காது!
விழிப்புணர்வை அதிகரிக்கிறது, மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. உங்கள் மூளை செயல்பாடுகளை அதிகரித்து உங்கள் சிந்தனைத் திறனை மேம்படுத்துகிறது.. புலன்களை மேலும் செயல்படுத்துகிறது, இது பார்வையை மேம்படுத்துகிறது. இது சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது.
நாம் ஒவ்வொரு நாளும் சாதாரணமாக நடக்கும்போது, எதையும் யோசிக்காமல் முன்னோக்கி அடியெடுத்து வைக்கிறோம். ஆனால் நாம் பின்னோக்கி அடியெடுத்து வைக்கும்போது, அது நம் கால்களின் சகிப்புத்தன்மை மற்றும் ஏரோபிக் திறனை விரைவாக மேம்படுத்த உதவும். பின்னோக்கி ஓட முயற்சிப்பது சரியானது, ஆனால் இதற்காக, ஒரு டிரெட்மில் அல்லது வீடுகளில் மட்டுமே அதனை முயற்சிப்பது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
இதையும் படிக்க : மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் மன அழுத்தம் – எப்படி தவிர்ப்பது?
பின்னோக்கி நடப்பது எப்படி?
முதலில், பின்னோக்கி நடப்பதற்கு ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்யவும். ஆரம்பத்தில், வீட்டின் பின்பக்கம், ஒரு பூங்கா, பாதை அல்லது டிரெட் மில்லில் முயற்சி செய்யுங்கள். விழுந்து விடுவோம் என்ற பயம் இல்லாத இடத்தில் அதனை முயற்சிப்பது அவசியம் . நீங்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ளும்போது, யாராவது உங்களுடன் இருந்தால் நல்லது. பின்னோக்கி நடக்கும்போது கவனச்சிதறல் காரணமாக காயம் அல்லது விழும் அபாயம் உள்ளது. எனவே, பின்னோக்கி நடக்கும்போது சில விஷயங்களைக் கவனித்துக்கொள்வது அவசியம்.