Health Tips: பழம் நல்லதா? பழ ஜூஸ் நல்லதா? எது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது?

Fruit or Fruit Juice Health Benefits: உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தாலும் சரி அல்லது முற்றிலும் ஆரோக்கியமான நபராக இருந்தாலும் சரி, பழம் சாப்பிடுவது ஜூஸ் குடிப்பதை விட மிகச் சிறந்தது என்று கூறுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், பழத்திற்கும் ஜூஸூக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Health Tips: பழம் நல்லதா? பழ ஜூஸ் நல்லதா? எது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது?

பழம் - ஜூஸ்

Published: 

04 Feb 2026 16:33 PM

 IST

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலரும் தங்களது ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துகொள்கிறார்கள். பலரும் உடல் பருமன், சர்க்கரை நோய் (Diabetes) போன்ற பிரச்ச்னைகளை சந்திக்கின்றன. இதன் காரணமாக, எதை சாப்பிடுவது சரி, தவறு என்பதைப் புரிந்துகொள்வது கடினமாகிவிடுகிறது. அந்தவகையில், பலரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக பழத்திற்கு பதிலாக, பழ ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமானது என்று நினைக்கிறார்கள். ஏனெனில் அது பழத்திலிருந்து உருவாக்கப்படுகிறது. அதன்படி, உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தாலும் சரி அல்லது முற்றிலும் ஆரோக்கியமான நபராக இருந்தாலும் சரி, பழம் சாப்பிடுவது ஜூஸ் (Fruit Juice) குடிப்பதை விட மிகச் சிறந்தது என்று கூறுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், பழத்திற்கும் ஜூஸூக்கும் உள்ள வித்தியாசம் என்ன, பழம் ஏன் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

ALSO READ: பலரும் விரும்பும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. இது உடலுக்கு ஆரோக்கியமானதா?

ஜூஸ் ஏன் எப்போதும் நல்லதல்ல?

இரத்த சர்க்கரை அளவு விரைவாக அதிகரிக்கும்:

ஜூஸ் தயாரிக்கப்படும் போது, ​​அதில் உள்ள இயற்கை சர்க்கரைகள் மிக விரைவாக உடலை அடைகின்றன. குறிப்பாக பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் அல்லது கடைகளில் கிடைக்கும் அதிக இனிப்புச் சாறுகள் இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானது.

நார்ச்சத்து இழப்பு:

பழத்தின் மிகப்பெரிய நன்மை அதன் நார்ச்சத்துதான். இருப்பினும், பழத்தில் இருந்து ஜூஸ் பிழியும் போது இந்த நார்ச்சத்து கிட்டத்தட்ட முழுமையாக அகற்றப்படுகிறது. இந்த நார்ச்சத்து இல்லாததால், சர்க்கரை நேரடியாக இரத்த ஓட்டத்தில் சென்று, இரத்த சர்க்கரை அளவுகளில் விரைவான அதிகரிப்பை ஏற்படுத்துகிறது.

அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை:

ஒரு கிளாஸ் ஜூஸில் பல பழ வகைகள் உள்ளன. இது உடலுக்குத் தேவையானதை விட அதிக கலோரிகளையும் சர்க்கரையையும் வழங்கக்கூடும். இது எடை அதிகரிப்பதற்கும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை சீர்குலைப்பதற்கும் வழிவகுக்கும்.

சர்க்கரை நோயாளி ஒருவர் ஜூஸ் குடிக்க விரும்பினால், அவர் வீட்டில் தயாரிக்கப்பட்ட ப்ரஸாக தயாரிக்கப்பட்ட ஜூஸ்களை மட்டுமே குடிக்க வேண்டும். பேக் செய்யப்பட்ட ஜூஸ்களை மிகக் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில், முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

பழங்களை சாப்பிடுவது ஏன் அதிக நன்மை பயக்கும்?

சர்க்கரை அளவு:

ஒரு முழு பழத்தை சாப்பிடும்போது உடலுக்கு நிறைய நார்ச்சத்து கிடைக்கிறது. இந்த நார்ச்சத்து சர்க்கரை மெதுவாக இரத்தத்தை அடைய உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் அதிகரிப்புகளைத் தடுக்கிறது.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை:

பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

ALSO READ: மாரடைப்பு என்பது வெறும் மார்பு வலி மட்டுமல்ல.. இது வந்தாலும் அறிகுறிகள்தான்..!

இயற்கை இனிப்பு பாதுகாப்பானது:

பழத்தில் உள்ள இனிப்பு இயற்கையானது. சரியான அளவில் பழங்களை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்காது. மேலும், இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை